MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Michael Jackson: மூன்வாக் போட ரெடியா? திரையரங்குகளை அதிரவைக்க வருகிறார் மைக்கேல் ஜாக்சன் - கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்!

Michael Jackson: மூன்வாக் போட ரெடியா? திரையரங்குகளை அதிரவைக்க வருகிறார் மைக்கேல் ஜாக்சன் - கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்!

பாப் உலகின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'Michael' திரைப்படத்தில், அவரது மருமகன் ஜாஃபர் ஜாக்சன் நடிக்கிறார். இப்படம் மைக்கேலின் இசைப் பயணம் அவர் சந்தித்த சவால்களை இதுவரை கண்டிராத கோணத்தில் காட்சிப்படுத்தவுள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 04 2026, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குஷியில் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்
Image Credit : michael jackson instagram

குஷியில் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்

பாப் இசையின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் ‘Michael’ திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லயன்ஸ்கேட் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னோட்டம், மைக்கேலின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
வாரிசு எடுக்கும் விஸ்வரூபம்
Image Credit : michael jackson instagram

வாரிசு எடுக்கும் விஸ்வரூபம்

ஜாஃபர் ஜாக்சன் இப்படத்தின் மிகப்பெரிய பலமே மைக்கேல் ஜாக்சனாக அவரது மருமகன் ஜாஃபர் ஜாக்சன் நடிப்பதுதான். திரையுலகிற்குப் புதியவரான ஜாஃபர், தனது மாமாவின் உடல்மொழி மற்றும் நடன அசைவுகளை அப்படியே உள்வாங்கி நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பேசிய இயக்குநர் அன்டோயின் ஃபுக்குவா, ஜாஃபரின் நடிப்பு மைக்கேலின் ஆன்மாவை அப்படியே பிரதிபலிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
Music: உள்ளத்தை அள்ளிச் சென்ற சிற்பி.! தமிழ் திரையிசையை மாற்றியமைத்த 10 பாடல்கள்!
Related image2
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
35
பிரம்மாண்டமான கூட்டணியும் நட்சத்திரப் பட்டாளமும்
Image Credit : michael jackson instagram

பிரம்மாண்டமான கூட்டணியும் நட்சத்திரப் பட்டாளமும்

ஹாலிவுட்டின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர். ‘கிளாடியேட்டர்’ படத்திற்குத் திரைக்கதை எழுதிய ஜான் லோகன் இப்படத்தின் கதையைச் செதுக்கியுள்ளார். மைக்கேலின் தந்தை ஜோ ஜாக்சனாக கோல்மன் டோமிங்கோவும், தாய் கேத்தரீனாக நியா லாங்கும் நடித்துள்ளனர். மேலும், டயானா ரோஸ், பெர்ரி கார்டி போன்ற இசையுலக ஜாம்பவான்களின் கதாபாத்திரங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

45
திரைக்குப் பின்னால் இருக்கும் நிஜ மைக்கேல்
Image Credit : michael jackson instagram

திரைக்குப் பின்னால் இருக்கும் நிஜ மைக்கேல்

வெறும் மேடை நிகழ்ச்சிகளை மட்டும் காட்சிப்படுத்தாமல், மைக்கேல் ஜாக்சன் எனும் தனிமனிதனின் உணர்வுகளையும் இந்தப் படம் பேசவுள்ளது. 'ஜாக்சன் 5' குழுவில் அவர் பாடிய ஆரம்ப நாட்கள் முதல், உலகமே வியந்து பார்த்த சூப்பர்ஸ்டாராக அவர் வளர்ந்த விதம் வரை அனைத்தும் இதில் அடங்கும். மேடைக்கு வெளியே அவர் சந்தித்த சவால்கள் மற்றும் முரண்பாடுகளை இதுவரை கண்டிராத கோணத்தில் இப்படம் காட்சிப்படுத்தவுள்ளது.

55
வெளியீட்டுத் தேதி மற்றும் எதிர்பார்ப்பு
Image Credit : Getty

வெளியீட்டுத் தேதி மற்றும் எதிர்பார்ப்பு

ஜி.கே. பிலிம்ஸ் மற்றும் லயன்ஸ்கேட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் பயோபிக், ஏப்ரல் 24, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. மைக்கேல் ஜாக்சனின் இசை மரபை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தப் படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!
Recommended image2
ரூ.5 கோடிக்கு பதிலாக ரூ.50 கோடி கொடுக்கும் சந்திரகலா ; கார்த்திக்கின் இடத்தை ஆட்டைய போட நியூ பிளான்!
Recommended image3
Priyanka Chopra: ராஜமௌலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா! இந்திய சினிமாவில் மெகா 'ரீ-என்ட்ரி'!
Related Stories
Recommended image1
Music: உள்ளத்தை அள்ளிச் சென்ற சிற்பி.! தமிழ் திரையிசையை மாற்றியமைத்த 10 பாடல்கள்!
Recommended image2
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved