எம்புரான் படத்தில் கேமியோ யார்? யூடியூபர் இர்பானிடம் மோகன்லால் சொன்ன சீக்ரெட்
யூடியூபர் இர்பானின் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் மோகன்லால், எம்புரான் படத்தில் வரும் கேமியோ ரோல் பற்றி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Is Shah Rukh Khan Play Cameo in Empuraan Movie : மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படம் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதிக கவனத்தை பெற்றுள்ளது. 'லூசிபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவரும் இது, தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி திரைப்படங்களின் முன்பதிவு சாதனைகளை முறியடித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் 'எம்புரான்' படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது. எம்புரான் திரைப்படம் ஹாலிவுட் பட ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே வெளியான முன்னோட்டம் மூலம் தெரியவந்தது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
Prithviraj, Mohanlal
லைக்கா புரொடக்ஷன்ஸ், ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவீஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். முரளி கோபியின் திரைக்கதையில் உருவான இந்த திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் முதல் ஐமேக்ஸ் திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ஸ்ரீ கோகுலம் கோபாலனின் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... இப்படி ஒரு காலேஜா? எம்புரான் படத்துக்காக லீவும் விட்டு டிக்கெட்டும் Free-யா கொடுத்த கல்லூரி!
Empuraan Mohanlal
இப்படத்தில் மோகன்லால் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சாரமூடு, சானியா ஐயப்பன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் ஃப்ளின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. எம்புரான் படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாடு வந்திருந்த மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தனர்.
Youtuber Irfan With Mohanlal
அந்த வகையில் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவரான இர்பானின் இர்பான்ஸ் வியூ சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார் மோகன்லால். அப்போது இப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்திருப்பது உண்மைதானா என இர்பான் கேட்டதும், ஷாக் ஆன மோகன்லால், அவரை கலாய்த்து பதிலளித்துள்ளார். அதன்படி, ஆமால் ஷாருக்கான் நடிச்சாரு, ஆனால் அவர் நடித்த காட்சிகளை டெலிட் செய்துவிட்டார்கள் என மோகன்லால் சொல்ல, உடனே பிருத்விராஜும், நீங்கள் டெலிடட் சீன்ஸ் வெளியாகும்போது பார்ப்பீர்கள் என சேர்ந்து கலாய்த்துள்ளார். இதன்மூலம் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இருந்தாலும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகர் யார் என்பதை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகும்போது அது சர்ப்ரைஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் வீர தீர சூரனை விட டபுள் மடங்கு வசூல்; முன்பதிவில் மாஸ் காட்டும் எம்புரான்!