MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சக கலைஞருக்கு உதவுவதற்காக திரைக்கதையை மாற்றிய மக்கள் திலகம்! 'மீனவ நண்பனில்' எம்.ஜி.ஆர் நிகழ்த்திய மனிதாபிமான மேஜிக்!

சக கலைஞருக்கு உதவுவதற்காக திரைக்கதையை மாற்றிய மக்கள் திலகம்! 'மீனவ நண்பனில்' எம்.ஜி.ஆர் நிகழ்த்திய மனிதாபிமான மேஜிக்!

திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தலையீடு, சக கலைஞர்களின் வாழ்வை உயர்த்துவதற்ககவே இருக்குமாம். 'மீனவ நண்பன்' படத்தில் கவிஞர் முத்துலிங்கத்திற்கு வாய்ப்பளிக்க அவர் திரைக்கதையையே மாற்றிய விதம், மனிதாபிமான மேஜிக்கைப் பறைசாற்றுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 19 2026, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வள்ளல் தன்மை கொண்ட ஹீரோ
Image Credit : Asianet News

வள்ளல் தன்மை கொண்ட ஹீரோ

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் செம்மையாக உருவாக வேண்டும் என்பதற்காக நடிகர்கள் காட்டும் அதீத ஈடுபாடு சில நேரங்களில் 'தலையீடு' என்று விமர்சிக்கப்படுவதுண்டு. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தலையீடு என்பது வெறும் நேர்த்திக்காக மட்டுமல்லாமல், சக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் அமைந்தது. ஒரு கவிஞனின் திறமை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, 'மீனவ நண்பன்' திரைப்படத்தின் திரைக்கதையையே மாற்றிய அந்த நெகிழ்ச்சியான மனிதாபிமான மேஜிக்கைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

25
கவிஞனுக்காக ஒரு 'கட்டளை'
Image Credit : Asianet News

கவிஞனுக்காக ஒரு 'கட்டளை'

இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 'மீனவ நண்பன்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. அப்போது கவிஞர் முத்துலிங்கம் இன்னும் ஒரு பாடல் கூட படத்தில் எழுதவில்லை என்பதை எம்.ஜி.ஆர் அறிந்தார். ஒரு திறமையான கலைஞனுக்குத் தன் படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து, "படத்தில் ஒரு ‘ட்ரீம் சாங்’ சேர்த்திடுங்கள், அதை முத்துலிங்கம் எழுதட்டும்" என்று அன்புக் கட்டளையிட்டார்.

Related Articles

Related image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Related image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
35
சூழலை மிஞ்சிய மனிதாபிமானம்
Image Credit : Facebook/MGR

சூழலை மிஞ்சிய மனிதாபிமானம்

இயக்குநர் ஸ்ரீதரோ, "கதையில் அதற்கான சூழலே இல்லையே" என்று தயங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் சொன்ன அந்தப் பதில், அவரது திரை அறிவையும் மனிதாபிமானத்தையும் ஒருசேரக் காட்டியது: "கனவுப் பாடலுக்கு என்ன சூழல் வேண்டும்? சூழல் இல்லாமலேயே ஒரு சூழலை உருவாக்குவதுதான் கனவுப் பாடல்!" தனது அதிகாரத்தை ஒரு கலைஞனின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய எம்.ஜி.ஆர், "இந்தப் பாட்டுதான் அடுத்த ஷூட்டிங்" என்று உறுதியாகக் கூறி, தயாரிப்பாளரிடமும் பேசி அந்தப் பாடலைச் சேர்க்க வைத்தார். இது சக கலைஞர் மீது எம்ஜிஆர் கொண்டிருந்த  அன்பை காட்டுகிறது என்றால் அது மிகையல்ல.

45
காலத்தை வென்ற 'தங்கம்'
Image Credit : Asianet News

காலத்தை வென்ற 'தங்கம்'

எம்.ஜி.ஆரின் அந்த ஆக்கப்பூர்வமான பிடிவாதத்தால் உருவான பாடல்தான், இன்றுவரை நம் காதுகளில் தேனாக ஒலிக்கும் "தங்கத்தில் முகமெடுத்து... சந்தனத்தில் உடலெடுத்து..." என்ற பாடல். முத்துலிங்கத்தின் காவிய வரிகளும், எம்.ஜி.ஆரின் அந்தப் பாசிட்டிவ் எண்ணமும் இணைந்து ஒரு மிகச்சிறந்த ஹிட் பாடலைத் தமிழ் சினிமாவுக்குப் தந்தது. 

55
சக கலைஞர்களின் உயர்வில் இன்பம்
Image Credit : Facebook/MGR

சக கலைஞர்களின் உயர்வில் இன்பம்

ஒரு தனிமனிதனின் திறமையை உலகம் அறியச் செய்ய, படத்தின் ஓட்டத்தையே மாற்றி அமைத்த அந்த 'மேஜிக்' எம்.ஜி.ஆரால் மட்டுமே சாத்தியமானது. வெறும் நடிகராக இல்லாமல், சக கலைஞர்களின் உயர்வில் இன்பம் கண்ட அந்தப் பண்புதான் அவரை இன்றும் மக்கள் மனதில் 'புரட்சித் தலைவராக' வாழ வைக்கிறது. ஒரு பாடலுக்காக அவர் எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு, முத்துலிங்கம் என்ற சிறந்த கவிஞனைத் திரையுலகுக்கு அடையாளம் காட்டியது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாப் கியரில் அய்யனார் துணை; டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
Recommended image2
Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம் - ட்ரெண்டிங்காகும் ரசிகர்கள் கோரிக்கை!
Recommended image3
பாண்டியன் ஸ்டோர்ஸ் மாமியாரின் 'ரியல் லைப்' ரொமான்ஸ்.! ராம்கியின் ஒரு வார்த்தையில் விழுந்த நிரோஷா!
Related Stories
Recommended image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Recommended image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved