கழுதை கதையோடு அஜித் மேனேஜர் சொன்ன மெசேஜ்...யாருக்காக?
இன்று அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு...அஜித் மீதான நிபந்தனையற்ற அன்பு என குறிப்பிட்டுள்ளார்.

Ajith
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். வினோத் இயக்கிய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 200 கொடிகள் வரை வசூல் செய்திருந்த இந்த படத்தில் காவல் அதிகாரியாக அஜித் நடித்திருந்தார்.
AJITH
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ள அஜித் 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். வீரா' என தலைப்பு வைக்கப்படும் என கூறப்படும் இந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
AK 62
இந்த படத்தை அடுத்து அஜித் 62 வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இசையில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதையடுத்து அஜித் தனது முந்தைய இயக்குனரான சிறுத்தை சிவாவுடன் இணைவார் தெரிகிறது.
AJITH
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள். நான் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தோடு இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு! நிபந்தனையற்ற அன்பு.அஜித் என குறிப்பிட்டிருப்பது ஒருவேளை விக்னேஷ் சிவன் அல்லது சிறுத்தை சிவா இவர்களுடன் அஜித் இணைந்திருப்பது குறித்து இருக்குமோ என பேசப்படுகிறது.