MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!

பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சுமார் 100 கோடி மதிப்பில்...  ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்டமான வீட்டின், புகைப்படங்கள் ஒரு பார்வை. 

3 Min read
manimegalai a
Published : Aug 23 2024, 12:50 PM IST| Updated : Aug 23 2024, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Chiranjeevi House

Chiranjeevi House

தெலுங்கு திரையுலகில் சுமார் 100 கோடி சம்பளம் பெரும் நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, 1955 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்தது கொனிடேலா சிவசங்கர வர பிரசாத். திரையுலகில் நுழைந்த பின்னர் தன்னுடைய பெயரை சுருக்கி சிரஞ்சீவி என வைத்து கொண்டார். சென்னையில் உள்ள மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இவர் படித்ததால், தெலுங்கு மட்டும் இன்றி தமிழிலும் நன்கு பேச கூடியவர். தமிழில் கெஸ்ட் ரோலில் ஒரு சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும், அதிகப்படியான தெலுங்கு படங்களிலேயே நடித்தார்.

211
Chiranjeevi 69th Birthday

Chiranjeevi 69th Birthday

69 வயதாகும் இவர், இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் மட்டும் இன்றி, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமையாளராகவே ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். சிரஞ்சீவிக்கு அடுத்தபடியாக இவருடைய மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் 50 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் பிரபலமாக உள்ளார்.

தடாலடி... சிங்கபெண்ணுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை! இந்த வாரத்தின் டாப் 10 TRP விவரம்!

311
chiranjeevi House Home Tour

chiranjeevi House Home Tour

நேற்று தன்னுடைய 69-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சிரஞ்சீவிக்கு... ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், ரசிகர்கள் பலர் சிரஞ்சீவி பற்றிய தகவலைகளை தேடி பிடித்து படித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், சிரஞ்சீவியின் ஹோம் டூர்... அதாவது அவரின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

411
Chiranjeevi With Mother

Chiranjeevi With Mother

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸில் பகுதியில் சிரஞ்சீவி பார்த்து... பார்த்து... ரசனையோடு கட்டியுள்ள  இந்த வீட்டில், தனக்கு பிடித்ததை போல் மாடி தோட்டத்தை வைத்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவற்றை கவனித்து கொள்வது என்பது சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்த பொழுது போக்காகும். அதே போல் சிரஞ்சீவியின் இந்த வீடு 25,000 சதுர அடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

என்னவன் இவன்... லவ் மேரேஜுக்கு ரெடியான மேகா ஆகாஷ்; சைலண்டாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

511
Chiranjeevi Garden Area

Chiranjeevi Garden Area

மாடர்ன் அரண்மையை போல் இருக்கும் இந்த வீட்டை கட்ட சிரஞ்சீவி கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவழித்திருக்கலாம் என கூறப்படுகிறது. வீட்டில் நுழைவு வாயிலில் இயற்கையே நம்மை வரவேற்கும் விதையில் பசுமையான பூ செடிகள் உள்ளன. இவர் இந்த வீட்டின் அழகை மெருகேற்றும் விதத்தில் உள்ளது. இந்த வீட்டை கட்டிய விலையை விட... வீட்டின் உள்ளே செய்யப்பட்டிருக்கும் இன்டீரியர் டிசைன்களுக்கான செலவு அதிகம் என கூறப்படுகிறது. 

611
Ramcharan Choice

Ramcharan Choice

இவை அனைத்தும் ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி மேஜை, நிஜாமி சுவரில் இடம்பெற்றுள்ள கலைத்துவம் கொண்ட புகைப்படங்கள், வண்ண விளக்குகள்... சமையல் அரை போன்றவை நேர்த்தியின் உச்சம்.

15 வயதில் திருமணம்; சில வருடத்தில் இறந்த கணவர்! கைவிட்ட 2-ஆவது கணவர்! விஜய் டிவி சீரியல் நடிகையின் கண்ணீர் கதை

711
Speciality in Chiranjeevi House

Speciality in Chiranjeevi House

சிரஞ்சீவியின் வீட்டில் டென்னிஸ் மைதானம், அடித்தளத்தில் ஒரு பெரிய மந்திர், உடற்பயிற்சி கூடம், மீன் குளம் மற்றும் பல உயர்தர வசதிகள் உள்ளன. குழந்தைகள் மாற்றம் பெரியவர்களுக்கு என இரண்டு நீச்சல் குளமும் உள்ளது. தன்னுடைய வீட்டின் சீலிங்கை பிரத்தேயகமாக வடிவமைத்துள்ளார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். 
 

811
Jade Type of ceiling

Jade Type of ceiling

ஜெட் என கூறப்படும் இந்த வகையான சீலிங் டிசைன்... பார்த்ததுமே நம்மை வசீகரிக்கும் அழகுடையாது. மேலும், அலங்கரிக்கப்பட்ட மரத்தாலான பேனல்கள் ஒவ்வொரு அரைக்கும் ராயல் டச் கொடுக்கின்றன. ஒரு பழுப்பு நிற ஓட்டோமான் மற்றும் அழகான பின் கண்ணாடி ஆகியவை அதிநவீன தோற்றத்தை அளிக்கின்றன.

காண்டம் வாங்கி வா.. கட்டாயப்படுத்திய நகுல்! அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரால் வெளியேறிய நடிகை?

911
Chiranjeevi Modern Place

Chiranjeevi Modern Place

சிரஞ்சீவி பூஜை அரை... சிரஞ்சீவி அவர்களை மனைவி ஆசை படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூஜை அரை பிரமாண்டமாக வடிவமைக்க பட்டுள்ளது. காரணம் எந்த ஒரு விசேஷ நாட்கள் என்றாலும் அவரின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் சிரஞ்சீவியின் வீட்டில் கூடுவது வழக்கம்.

1011
Swimming Pool

Swimming Pool

தன்னுடை வீட்டின் தரையை கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட மார்பில் கொண்டு அலங்கரித்துள்ளார் சிரஞ்சீவி. அதே போல் ஒவ்வொரு அறையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்யப்பட்டுள்ளது. வீட்டின் முதல் மாடியில்... விருந்தினர்களுக்காகவு, தன்னுடைய தம்பி பிள்ளைகளுக்காகவும் பிரதியாக கெஸ்ட் ரூம்களும் இந்த வீட்டில் உள்ளன.

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட ரஜினிகாந்த்; நடிகை சுமித்ரா கூறிய அதிர்ச்சி சம்பவம்!
 

1111
Dinning Hall

Dinning Hall

சிரஞ்சீவி தன்னுடைய மாடர்ன் அரண்மனை போல் கட்டி இருந்தாலும்.. அதில் பல கலைநுட்பம் கொண்ட பொருட்களை கொண்டு அழகு படுத்தியுள்ளார். குறிப்பாக சீனர்கள் அதிஷ்ட கல்லாக பார்க்கப்படும் Jade கல்லை கொண்டு பல பொருட்கள் இந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved