MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Meesaya Murukku-2 Review: 3 வேடங்களில் மிரட்டிய ஆதி... முதல் பாதி ஜென் ஸி, 2-ம் பாதி ஃபுல் எனர்ஜி; 'மீசைய முறுக்கு-2' எப்படி இருக்கு?

Meesaya Murukku-2 Review: 3 வேடங்களில் மிரட்டிய ஆதி... முதல் பாதி ஜென் ஸி, 2-ம் பாதி ஃபுல் எனர்ஜி; 'மீசைய முறுக்கு-2' எப்படி இருக்கு?

Meesaya Murukku-2 Review: ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, 3 வேடங்களில் நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் வெளியாகியுள்ளது. நெப்போடிசத்தை சாடிய 'மீசைய முறுக்கு 2' ஹிட் அடித்ததா? படத்தின் பிளஸ், மைனஸ், ரசிகர்களின் கருத்துகள் என்ன?

3 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2' எப்படி இருக்கு?
Image Credit : x

ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2' எப்படி இருக்கு?

கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற 'மீசைய முறுக்கு' திரைப் படத்தை தொடர்ந்து, 2026ல் அதே தலைப்பில் அதன் 2ம் பாகத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்து வெளியிட்டுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

சுந்தர்.சி - குஷ்பு தயாரிப்பில் செப்.25-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு ஒரு இசைக்கச்சேரி அனுபவத்தைத் தருகிறதா? படத்தின் கதை, நிறை, குறைகள் மற்றும் சிறப்பு திரையிடல் பார்த்த ரசிகர்களின் X தள விமர்சனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மீசைய முறுக்கு 2 - படத்தின் கதைக்களம் என்ன?
Image Credit : x

மீசைய முறுக்கு 2 - படத்தின் கதைக்களம் என்ன?

Meesaya Murukku-2 Review: ‘மீசைய முறுக்கு 2’ படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் பாகத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்கின்றன.

கானா பாடல்களை அற்புதமாகப் பாடும் தாஸின் திறமையைக் கண்டு, பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு ஒருவர் அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், அங்கிருக்கும் சிஸ்டம் (முறைகேடான சூழல்) காரணமாக தாஸுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோகிறது. அங்கிருந்து தொடங்கும் கதை நிகழ்காலத்திற்கு மாறுகிறது.

தாஸின் பேரன் ஜீவா (ஹிப்ஹாப் தமிழா ஆதி), பப் ஒன்றில் கிடைக்கும் இடைவெளிகளில் தனது ஹிப்ஹாப் பாடல்களைப் பாடும் இளைஞனாக அறிமுகமாகிறார். அவரது திறமையைக் கண்டு ஈர்க்கப்படும் ஷீலா (கெத்திகா சர்மா), அவரை ஒரு வாரிசு நடிகரிடம் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், அந்த நெப்போ கிட் (Nepo Kid) ஜீவாவை அவமதிக்க, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.

இதையடுத்து, ஜீவாவுக்கு அவரது தாத்தா தாஸ் மற்றும் தந்தை 'டைகர்' சிவாவின் கடந்தகால வாழ்க்கைக் கதை தெரியவருகிறது. தந்தையின் இசைத் திறமைக்கு ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை? சாதாரண பேருந்து ஓட்டுநராக இருந்து மகனை ஆளாக்க அவர் செய்த தியாகங்கள் என்னென்ன? இவையனைத்தையும் அறிந்துகொண்ட பிறகு, ஜீவா தனது இசை லட்சியத்தை அடைந்தாரா அல்லது வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டாரா என்பதே மீதிக் கதை.

35
மீசைய முறுக்கு 2 - படம் எப்படி இருக்கிறது?
Image Credit : x

மீசைய முறுக்கு 2 - படம் எப்படி இருக்கிறது?

ஹிப்ஹாப் தமிழா ஆதி தாஸ், டைகர் சிவா, ஜீவா என 3 காலகட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களாக 3 வேடங்களில் அசத்தியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே வரும் "பப்பாளி பழமே" பாடல் தொடங்கி, "அவ ஆரா 10/10", "கலைவாணியே", "கோயிந்தம்மா" உள்ளிட்ட பாடல்கள் திரையரங்குகளில் ஆட்டம் போட வைக்கின்றன. ஜி.வி. பிரகாஷைப் போல, ஆதியும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டே நடிக்கலாம் என்பதற்கு சான்றாக, நீண்ட நாள்களுக்குப் பிறகு பாடல்களாலேயே ஒரு படம் ஹிட் அடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பாடல்களைத் தாண்டி கர்நாடக சங்கீதம் vs கானா மோதல், வேற்று வீட்டத்துப் பெண்ணைத் திருமணம் செய்ததால் ஏற்படும் சிக்கல்கள், பின்புலம் ஏதுமின்றித் தனியாகப் போராடி முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் கனவு எனப் படம் முழுவதும் நேர்மறை எண்ணங்கள் (பாசிட்டிவிட்டி) நிரம்பியுள்ளன.

குறிப்பாக, கோயிலில் அப்பா நாசர் மற்றும் மகள் ரம்யா ரங்கநாதன் சந்திக்கும் காட்சியில் வரும் வாய்ஸ் ஓவர் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. எந்தச் சமூகத்தின் மனதையும் புண்படுத்தாமல், உழைத்து ஜெயித்தால் அனைவரும் பாராட்டுவார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதம் கைதட்டல் பெறுகிறது.

45
மீசைய முறுக்கு 2 - படத்தின் பிளஸ் & மைனஸ் என்ன?
Image Credit : x

மீசைய முறுக்கு 2 - படத்தின் பிளஸ் & மைனஸ் என்ன?

பிளஸ்: 

கருணாஸ் & பாபா பாஸ்கர் ஆகியோரின் கதாபாத்திரப் பயன்பாடு மிகச் சிறப்பு. நாசரை 'டீ-ஏஜிங்' (De-aging) தொழில்நுட்பம் மூலம் இளமையாகக் காட்டிய காட்சிகளில் உள்ள உழைப்பு தெரிகிறது. கானா பாடல் குறித்து ரம்யா ரங்கநாதன் பேசும் வசனங்கள் மற்றும் ஒரே இடத்தில் ஆரம்பித்தால் தான் ரேஸ் என ஆதி பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. கெத்திகா சர்மா, சைத்ரா ஆச்சரை விட ரம்யா ரங்கநாதனின் நடிப்பு ஒருபடி மேலே உள்ளது; அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் வலிமை. 3 காலகட்டங்களைக் கண்முன் கொண்டுவந்த கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு படத்திற்குப் பக்கபலம்.

மைனஸ்: 

முதல் பாதியில் யோகி பாபு மற்றும் ஹர்ஷத் கானுடன் வரும் நகைச்சுவை டிராக் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். படத்தில் வலிமையான பிரதான வில்லன் கதாபாத்திரம் இல்லை; அமைப்பையும் காலத்தையுமே வில்லனாகக் காட்டியுள்ளனர். ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரத்தின் முடிவு முழுமையான திருப்தியைத் தரவில்லை. இருப்பினும், நெப்போடிசம் குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள நம்ம புள்ள நல்லா இருக்கணும்னு எந்தவொரு தந்தையும் நினைக்கலாம்.. அதுல தப்பு இல்லை.. நம்ம புள்ள மட்டும் தான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தான் தப்பு என்ற வசன விளக்கம் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.

55
ரசிகர்களைக் கவர்ந்ததா 'மீசைய முறுக்கு 2'?
Image Credit : x

ரசிகர்களைக் கவர்ந்ததா 'மீசைய முறுக்கு 2'?

சென்னையில் நடைபெற்ற சிறப்பு முன்னோட்டக் காட்சியைக் கண்ட ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மீசைய முறுக்கு 2 எளிமையான, ஜாலியான படம். புரிய வைக்க அதிகம் மெனக்கெடாததே பலம். முதல் பாதி ஜென் ஸி (Gen Z) ரசிகர்களையும், 2-ம் பாதி ஆன்மீகத் தொடர்பையும் கொண்டு முழுமையான அனுபவத்தைத் தருகிறது; கடைசி 20 நிமிடங்கள் மிகவும் வலுவாக உள்ளது.

2-ம் பாதியில் படம் முழு பொழுதுபோக்காக மாறுகிறது. மைய உணர்வு அருமை, பாடல்கள் அனைத்தும் சூப்பர். சைத்ரா குறுகிய நேரமே வந்தாலும் தாக்கம் ஏற்படுத்துகிறார்; கெத்திகா கிளாமர் மற்றும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளார். ரம்யா ரங்கநாதன் நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்.

ஆதி 3 வேடங்களையும் சமாளித்து வலுவான நடிப்பைத் தந்துள்ளார்; கருணாஸ், ரம்யா துணை நிற்கின்றனர். படத்தின் மிகப்பெரிய பலம். முதல் பாதி சற்று திசையில்லாமல் தடுமாறினாலும், இடைவேளைக்குப் பிறகான ஊக்கமளிக்கும் காட்சிகள் மற்றும் இசை அதனை முழுமையாக ஈடுகட்டி விடுகின்றன. ஒட்டுமொத்தத்தில், குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தியேட்டரில் சென்று ஜாலியாகப் பார்த்து ரசித்து என்ஜாய் பண்ணக்கூடிய கமர்ஷியல் படமாக 'மீசைய முறுக்கு 2' அமைந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Recommended image2
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image3
Divya Sathyaraj : பயில்வான் ரங்கநாதன் எதிராக திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்
Related Stories
Recommended image1
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image2
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved