சிம்ரன்- ஜோதிகாவுடன் மீனா..3 ஸ்டார் புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்..
ஜோதிகா, மீனா, ஜோதிகா மூவரும் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக இருந்தவர் மீனா. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானதன் மூலம் 90களில் இளைஞர்களின் மனதை வெகுவாகவே இவர் கவர்ந்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமான மீனா, சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
இதை தொடர்ந்து பல படங்களில் சிறுமியாக நடித்த இவர் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் என இரண்டு சூப்பர் ஸ்டார் படங்களில் தோன்றி இருந்தார்.பின்னர் 1990களில் நவயுகம் படத்தில் ராஜேந்திர பிரசாத்துடன் தெலுங்கில் முதல்முறையாக நாயகியாக நடித்த இவர் தமிழில் ஒரு புதிய கதை படம் மூலம் அறிமுகமனார்.
இவர் கஸ்தூரிராஜா இயக்கிய ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக சோலையம்மாவாக பிரபலமடைந்து விட்டார். தொடர்ந்து விஜயகாந்த், ரஜினி, கமலஹாசன், பிரபு என அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடன் ஜோடியாக நடித்ததன் மூலம் அசைக்க முடியாத இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
சாக்லேட் கலர் ஃபிட் உடையில் கலக்கும் ஜான்வி கபூர்..லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் இதோ
2009 ஆம் ஆண்டு விக்ரம் இயக்கத்தில் விஜயகாந்தின் மரியாதை படத்தில் நாயகியாக தோன்றியவர் இவர் 2012 ஆம் ஆண்டு தம்பிக்கோட்டையில் நாயகனின் அக்காவாக நடித்திருந்தார். இதற்கிடையே 2009 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள். இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். இவர் தனது ஐந்தாவது வயதில் தனது தாயைப் போலவே சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்திருப்பார் நைனிகா.
மேலும் செய்திகளுக்கு...ரெட் கலர் ஹாட் உடையில் கலக்கும் ரகுல் பிரீத் சிங்...சமீபத்திய நியூ லுக் போட்டோஸ்
meena- kala
மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீனா சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் வித்யாசாகர் காலமானார். கடந்த ஜனவரிகள் மீனாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதில் மற்றவர்கள் மீண்ட நிலையில் அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். ஏற்கனவே நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவருக்கு கொரோனா மேலும் பாதிப்பை ஏற்படுத்த சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கு காரணம் மும்பையில் அவர் வசித்து வந்த வீட்டு அருகே அதிக புறாக்கள் இருந்ததும், அதன் எச்சங்களால் ஏற்பட்ட இன்ஃபக்ஷன் தான் காரணம் என மீனா சமீபத்தில் கூறியிருந்தார். தனது கணவரின் இறப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியும் மீனா முடங்கி இருந்தார்.
meena
இவருக்கு அவரது நண்பர்கள் உற்சாகமூட்டி பழைய நிலைக்கு திரும்பி வர உதவி கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது தோழியை சந்தித்து வரும் ரம்பா, நடன இயக்குனர் கலா உள்ளிட்டோருடைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா, மீனா, ஜோதிகா மூவரும் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. கேக் வெட்டியபடி மூவரும் ஜொலிக்கும் புகைப்படம் தான் அது.