அப்படி போடு... 'மாவீரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! உற்சாகத்த்தில் ரசிகர்கள்!
'மாவீரன்' படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'மாவீரன்' திரைப்படம், கடந்த மாதம் வெளியானது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 75 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Director Siddique: விஜய்யை வைத்து 'பிரெண்ட்ஸ்' படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்!
அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை அன்று 'மாவீரன்' திரைப்படம் அமேசான் ஓடிடி பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்ச்சாகமடைய செய்துள்ளது.
மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஹீரோ போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்க,விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.