MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு படம் இயக்க சபதம் எடுத்த மாரி செல்வராஜ்!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு படம் இயக்க சபதம் எடுத்த மாரி செல்வராஜ்!

விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படம் இயக்க சபதம் எடுத்துள்ளதாக மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 31 2024, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mari selvaraj Direct Love Movie soon

Mari selvaraj Direct Love Movie soon

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பற்றி பேசி கவனம் ஈர்த்த அவர், அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் என வரிசையாக வலி நிறைந்த படைப்புகளாக கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

24
Mari Selvaraj

Mari Selvaraj

தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இப்படத்தின் கிளைமாக்ஸ் காண்போர் கண்கலங்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக பைசன் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ரஜினி, கார்த்தி மட்டுமல்ல; மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் அடுத்த டாப் நடிகர்!

34
Director Mari Selvaraj

Director Mari Selvaraj

பைசன் படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் 2025-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. இது முடித்த கையோடு தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். இதுதவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் அவர் கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படி பிசியான இயக்குனராக வலம் வரும் மாரி, தான் காதல் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

44
Mari Selvaraj Movie Update

Mari Selvaraj Movie Update

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னிடம் காமெடி படம் பண்ண கதைகள் எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய மனைவி திவ்யா, என்னிடம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு காதல் படம் பண்ண சொல்லி கேட்ருக்காங்க. எந்த ஒரு சமூக அர்ப்பணிப்பும் இன்றி, முழுக்க முழுக்க காதல் சார்ந்த படமாக அது இருக்க வேண்டும் என என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன். கண்டிப்பா அந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பேன்” என்று மாரி செல்வராஜ் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... "என் கஷ்டத்தை படத்தில் கூற விரும்பவில்லை" லப்பர் பந்து இயக்குனர் நச் டாக் - மாரி செல்வராஜை தாக்கினாரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved