- Home
- Cinema
- Ponniyin selvan release date :திரைகாண தயாரான மணிரத்னத்தின் கனவுப்படம்! பொன்னியின் செல்வன் ரிலீஸ்தேதி அறிவிப்பு
Ponniyin selvan release date :திரைகாண தயாரான மணிரத்னத்தின் கனவுப்படம்! பொன்னியின் செல்வன் ரிலீஸ்தேதி அறிவிப்பு
Ponniyin selvan release date : ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
டெக்னிக்கல் சைடிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகத்திற்கான டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதால், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
ரிலீஸ் தேதியுடன் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு உள்ளன. கார்த்தி, திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரது தோற்றம் அடங்கிய பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.