- Home
- Cinema
- முகம் வீங்கி... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாளவிகா மோகனன் - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
முகம் வீங்கி... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாளவிகா மோகனன் - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Malavika Mohanan : பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, மாளவிகா மோகனனின் மார்க்கெட்டையும் பன்மடங்கு உயர்த்தியது.
பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இதையடுத்து தமிழில் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் பாலிவுட்டில் அடுத்தடுத்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இதுதவிர சமீபத்தில் மலையாள படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.
இதையும் படியுங்கள்... வெளிநாட்டு நடிகையுடன் குத்தாட்டம் போடும் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் - வைரலாகும் பிம்பிலிகி பிலாப்பி சாங் வீடியோ
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவரது கவர்ச்சி போடோஷூட்டுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் இவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பை விமான நிலையம் வந்திருந்த நடிகை மாளவிகா மோகனனை போட்டோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். அந்த புகைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் முகம் வீங்கிய நிலையில் காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போகினர். மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடிகை ரைசா வில்சன், தவறான பேசியல் காரணமாக தனது முகம் வீங்கிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். தற்போது மாளவிகா மோகனின் முகமும் சற்று வீக்கம் அடைந்தவாறு காணப்படுவதால், அவருக்கும் அவ்வாறு நடந்திருக்குமோ என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... தொடரும் சோழர்களின் வசூல் வேட்டை... மூன்றே நாளில் கலெக்ஷனில் டபுள் செஞ்சுரி அடித்த பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.