நயன்தாராவை மிஞ்சுவாரா மாளவிகா மோகனன்? தங்கலான் எதிர்பார்ப்பு!
தங்கலான் படத்தில் சூனியக்காரியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதுதான் எதிர்பார்ப்பு. நயன்தாராவுக்குப் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாளவிகா மோகனன் உருவெடுப்பாரா?
Malavika Mohanan Acting in Thangalaan
நயன்தாராவை விட தமிழ் சினிமாவில் கொடுக் கட்டிப் பறக்கும் நடிகையாக மாளவிகா மோகனன் தங்கலான் படம் மூலமாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் என்று அழைக்கப்படும் நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு சந்திரமுகி, தலைமகன், வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், வில்லு என்று அடுத்தடுத்து படங்களில் அடித்து தற்போது அன்னபூரனி என்ற படத்தில் நிற்கிறார்.
Malavika Mohanan
இதில் பல வெற்றி தோல்விகளை கடந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மஹாராணி, டாக்ஸிக் என்று தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
Malavika Mohanan Filmography
இந்த நிலையில் தான் நயன்தாராவை போன்று தற்போது மாளவிகா மோகனனும் உருவாகி வருகிறார். மாளவிகா மோகன்னுக்கு பேட்ட படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் அவரது முதல் படம். ரஜினியோடு நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளுடன் கனவு. அந்த கனவு மாளவிகா மோகனனுக்கு எளிதாக நிறைவேறிவிட்டது. சசிகுமாருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
Thangalaan Movie
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். ஆனால், அதன் பிறகு விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் அவருக்கு போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை. இருந்தாலும், அடுத்தடுத்த படங்கள் கை வசம் இருந்தன. அப்படி வந்த படம் தான் மாறன். தனுஷ் நடித்த இந்தப் படம் மாளவிகா மோகனனுக்கு தோல்வி படமாக அமைந்தது.
Malavika Mohanan Thangalaan Movie
இந்த நிலையில் தான் விக்ரம், பார்வதி, பசுபதி ஆகியோருடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்துள்ள தங்கலான் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இயக்குநர் பா ரஞ்சித் இயக்கி ஞானவேல் ராஜா உடன் இணைந்து தங்கலான் படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் சூனியக் காரியாக நடித்துள்ளார்.
Thangalaan Movie
தனது பழங்குடியின மக்களுடன் பழங்குடியின தலைவனான தங்கலான் (விக்ரம்), தங்கத்தை தேடும் வேலையில் இறங்குகிறார். அப்போது சூனியக்காரியான ஆரத்தியின் (மாளவிகா மோகனன்) கோபத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து தங்களது முழு பலத்துடன் ஆரத்தியை எதிர்த்து புறப்படுகிறார் தங்கலான்.
Actress Malavika Mohanan
படமும், காட்சியும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. இதில், சூனியக்காரியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை இந்தப் படத்தின் மூலமாக பதித்துள்ளார். இனி வரும் படங்களில் மாளவிகா மோகனன் இருப்பார் என்று இந்தப் படம் ரசிகர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது.