MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராஜ வாழ்க்கை வாழும் பிக் பாஸ் விஜய் சேதுபதி இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

ராஜ வாழ்க்கை வாழும் பிக் பாஸ் விஜய் சேதுபதி இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

நடிகரும், பிக் பாஸ் தொகுப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு மற்றும் அவரது சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 31 2024, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vijay sethupathi

vijay sethupathi

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து ஆரம்பத்தில் புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என பல்வேறு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது தென்மேற்கு பருவக்காற்று தான். சீனு ராமசாமி இயக்கிய இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

26
Makkal Selvan Vijay Sethupathi

Makkal Selvan Vijay Sethupathi

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உருவெடுத்தார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்த விஜய் சேதுபதிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தன.

36
Bigg Boss Vijay sethupathi

Bigg Boss Vijay sethupathi

குறிப்பாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக களமிறங்கினார். கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார்.

இதையும் படியுங்கள்... வெற்றி விழா கொண்டாடிய விடுதலை 2 டீம் - சூரி, விஜய் சேதுபதி ஆப்சென்ட் ஆனது ஏன்?

46
Vijay Sethupathi Salary

Vijay Sethupathi Salary

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கே விஜய் சேதுபதிக்கு ரூ.30 கோடி தான் சம்பளமாக வழங்கப்படும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அதைவிட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி இருக்கிறார் மக்கள் செல்வன்.

56
vijay sethupathi Net Worth

vijay sethupathi Net Worth

விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது வரை அவர் 50 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி ரூ.140 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறாராம். இவருக்கு சென்னையில் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது.

66
Vijay Sethupathi Car Collection

Vijay Sethupathi Car Collection

அதுமட்டுமின்றி தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம் விஜய் சேதுபதி. சென்னையில் கீழ்பாக்கம், என்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் இடங்கள் உள்ளதாம். அதேபோல் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்ட விஜய் சேதுபதியிடம் மினி கூப்பர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், இனோவா, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் உள்ளன. 

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி உடன் 4வது முறையாக ஜோடி சேரும் நயன்தாரா! இயக்கபோவது யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனைவியை பிரிந்த சோகத்தில் தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங் பற்றி தெரியுமா?
Recommended image2
சிம்பிளாக நடந்த திருமணம்... பாடகர் வேடனின் மனதை கொள்ளையடித்த அந்த பெண் யார் தெரியுமா?
Recommended image3
விஜயகாந்த் படத்தின் பாட்டை சுட்டு டியூன் போட்ட ரஹ்மான்?! நேரில் கூப்பிட்டு கேள்வி கேட்ட கவிஞர் வாலி.! என்ன நடந்தது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved