பண மோசடி வழக்கில் சிக்கிய மகேஷ் பாபு; அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு
பண மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ED Summons Mahesh Babu in Real Estate Fraud Case : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் மகேஷ் பாபுவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு ED நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு.
Mahesh Babu
மோசடியில் ஈடுபட்டாரா Mahesh Babu?
சூர்யா டெவலப்பர்ஸிடமிருந்து மகேஷ் பாபு ரூ.5.9 கோடி பெற்றதாக தெரிகிறது. இதில் ரூ.3.5 கோடி ரொக்கமாகவும், ரூ.2.5 கோடி RTGS மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் குறித்து ED விசாரணை நடத்தி வருகிறது.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகேஷ் பாபு விளம்பரப்படுத்தினார். இதற்காக அவர் அதிக ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சுரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்கள் ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... 20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!
ED Summons Mahesh Babu
1000 கோடியில் உருவாகும் Mahesh Babu படம்
இதனால் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்கு `SSMB 29` என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாகக் கொண்டு அட்வெஞ்சர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நடிகர் மகேஷ் பாபு பற்றி நடிகை த்ரிஷா சொன்ன ரகசியம்!!