1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்துக்கு பாதுகாப்பு இல்லையா? கடும் அப்செட்டில் ராஜமவுலி
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக் ஆகி உள்ளன.

Mahesh Babu's film footage leaked: The film crew is shocked! மகேஷ் பாபு, ராஜமௌலி காம்போவில் தற்போது ஒரு பெரிய ஆக்ஷன் திரைப்படம் ரெடியாகுது. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான நடிகர்கள் எல்லாரும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாரன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இன்னொரு பக்கம் பிரியங்கா சோப்ராவும் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
SSMB 29 movie scene leaked
லேட்டஸ்ட்டா மகேஷ் பாபு, ராஜமௌலி படத்துல இருந்து ஒரு சூப்பர் வீடியோ லீக் ஆகியிருக்கு. மகேஷ் பாபுவை வைத்து ஷூட் பண்ண ஒரு முக்கியமான சீன் லீக் ஆனது. ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேர்ல அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் பாபுவை புடிச்சு அவர் முன்னாடி கூட்டிட்டு வராங்க. மகேஷ் தன்னோட ஸ்டைல்ல நடந்து வந்து, ஒரு செக்யூரிட்டி அவர கீழ உட்கார வெச்சு, கைய பின்னாடி கட்ட சொல்றாரு. வீல் சேர்ல இருக்கறவரு பாக்குறாரு. அந்த வீல் சேர்ல இருக்கறதுதான் மெயின் வில்லன்னு தெரியுது. அவர்தான் ப்ரித்விராஜ் சுகுமாரன்னு சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ராஜமௌலிக்காக காதலை விட்டுக்கொடுத்தேன்; செய்வினை - சூனியத்தில் ஈடுபடுகிறார் - ஷாக் கொடுத்த பிரபலம்!
Rajamouli, Mahesh babu, Prithviraj sukumaran
இந்த ரெண்டு பேரும் நேருக்கு நேர் பாத்துக்கற சீனாக இது இருக்கலாம். ஹீரோ மகேஷ் பாபுவை, வில்லன் புடிச்சு வார்னிங் குடுக்கற சீன் மாதிரி இருக்கு. பாக்கறதுக்கே வேற மாதிரி இருக்கு. இதுல மகேஷ் பாபு மாஸ் லுக்கில் இருக்காரு. ஜஸ்ட் லீக் வீடியோவே இந்த ரேஞ்சுக்கு இருந்தா, அது படத்துல ஆர்.ஆர் மிக்ஸிங்ல எந்த ரேஞ்சுக்கு இருக்கும்னு புரிஞ்சுக்கலாம். இந்த லீக் வீடியோ படக்குழுவை கஷ்டப்படுத்தினாலும், மகேஷ் பாபு ஃபேன்ஸ் காலர தூக்கி விட்டுக்கற மாதிரி இருக்கு. இத அவங்க சோசியல் மீடியால வைரல் ஆக்கிட்டு இருக்காங்க.
Rajamouli Strict Action
எப்போதுமே ராஜமௌலி படத்துல டைட் செக்யூரிட்டி இருக்கும். செட்டுக்கு செல்போன்லாம் அனுமதிக்க மாட்டாங்க. யாருக்கும் இதுல விதிவிலக்கு இல்ல, அப்படி இருக்கறப்போ இந்த செட்டுக்கு செல்போன் எப்படி வந்துச்சுன்னு தெரியல. இப்படி முக்கியமான சீன்ஸ் லீக் ஆனா படத்தையே அது பாதிக்கும். இந்த வீடியோ லீக் ஆனதால ராஜமௌலி ரொம்ப கோவத்துல இருக்காராம். வீடியோ லீக் ஆன விஷயத்துல சட்டப்படி நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவு பண்ணியிருக்காங்க.
மேலும் இனி வரும் ஷெட்யூல்ல 'மூணு லேயர் செக்யூரிட்டி' போட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதாம். அதுமட்டுமில்லாம செக்யூரிட்டி ஏஜென்சிய மாத்த சொல்லி இயக்குனர் ராஜமௌலி தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னதாகவும் கூறப்படுகிறது தற்போது ஒடிசாவில் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துட்டு இருக்கு. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்காவில் நடத்த உள்ளனர்.
இதையும் படியுங்கள்... காஸ்ட்லி மிஸ்; கைநழுவிப்போன ராஜமவுலி பட வாய்ப்பு; ஃபீல் பண்ணிய சூர்யா