MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றியை கொடுக்குமா..! அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ஏகே 62 பட டைட்டில்

‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றியை கொடுக்குமா..! அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ஏகே 62 பட டைட்டில்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 01 2023, 12:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் கடந்தாண்டே கமிட் ஆன திரைப்படம் தான் ஏகே 62. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆன பின்னர் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விக்னேஷ் சிவன் ஆயத்தமாகி வந்த சமயத்தில் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்தது லைகா. அவர் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்க தாமதம் ஆனதால் ஏகே 62 படத்தின் அப்டேட்டையும் வெளியிடாமல் லைகா நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. அந்த வகையில் 3 மாதங்களை ஓட்டிவிட்ட அந்நிறுவனம் இதற்குமேல் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது என முடிவெடுத்து ஒரு வழியாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிவிட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு வடிவேலுவை பார்த்ததே இல்லையே..! மாமன்னன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது

34

நடிகர் அஜித் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடாமுயற்சி' என்ற மாஸ் ஆன டைட்டிலை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதைப்பார்த்து உற்சாகத்தில் திளைத்துப் போன ரசிகர்கள், இந்தப் படம் அஜித்துக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

44

அஜித்தின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்கும் விதமாக லைகா நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டுள்ளதால் சோசியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. ‘விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இதனை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அஜித்தின் கடந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்... ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image2
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Recommended image3
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved