மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு வாரிசு பிறந்தாச்சு..! அழகு குழந்தையை பெற்றெடுத்த மேக்னா ராஜ்!
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ள விஷயம் அவர்களது ஒட்டு மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.
அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
அப்பொழுது அவர் தன் கணவர் சிரஞ்சீவியின் ஆளுயர கட்அவுட்டை தனக்கு அருகில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
சிரஞ்சீவி சர்ஜாவின் இறப்பு இவர்களுது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எனினும் சிரஞ்சீவி சர்ஜாவின் வாரிசை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கி காத்திருந்தனர் குடும்பத்தினர். குறிப்பாக தன் அண்ணன் மீது உயிரையே வைத்திருந்த துருவ் சர்ஜா அண்ணன் குழந்தைக்காக, 10 லட்சத்தில் வெள்ளி தொட்டில் ஒன்றையும் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது, துருவ் சர்ஜா தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து நடிகை மேக்னா ராஜுக்கு பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.