MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sunny Leone song : வீடியோவ 3 நாள்ல தூக்கனும்!!! இல்லேனா.... வார்னிங் கொடுத்த அமைச்சர் - ஷாக் ஆன சன்னி லியோன்

Sunny Leone song : வீடியோவ 3 நாள்ல தூக்கனும்!!! இல்லேனா.... வார்னிங் கொடுத்த அமைச்சர் - ஷாக் ஆன சன்னி லியோன்

மத்தியப்பிரேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா, மதுபன் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடிகை சன்னி லியோன், பாடகர் ஷரிப், ஜோஷி ஆகியோரையும் எச்சரித்துள்ளார். 

2 Min read
Ganesh A | Asianet News
Published : Dec 27 2021, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பாலிவுட்டில் கடந்த 1960 களில் வெளியான கோஹினூர் படத்தில் இடம்பெற்ற ‘மதுபன் மே ராதிகா நாச்சே’ என்கிற ரசிகர்களால் இன்றளவுல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் கிருஷ்ணன் மற்றும் ராதையின் காதலை மையப்படுத்தி அமைந்திருக்கும். தற்போது இப்பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளனர். 

28

இந்த ரீமேக் பாடலை ஷரிப் மற்றும் ஜோஷி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலுக்கு நடிகை சன்னிலியோன் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். பிரபல இசை நிறுவனமான சரிகம இந்த ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது.

38

கடந்த 22-ந் தேதி வெளியான மதுபன் பாடலை, தற்போது வரை யூடியூபில் ஒருகோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது. ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

48

ஏனெனில் இந்தப் பாடலில் நடிகை சன்னிலியோன் படு கவர்ச்சியாக நடனமாடி உள்ளார் என்றும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் சில வரிகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது.

58

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாமியார்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர சில இந்து அமைப்புகளும் இப்பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. 

68

அந்த வகையில் தற்போது மத்தியப்பிரேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா, மதுபன் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடிகை சன்னிலியோன், பாடகர் ஷரிப், ஜோஷி ஆகியோரையும் எச்சரித்துள்ளார். 

78

மேலும் இந்துக்களின் மத உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த வீடியோவை அடுத்த 3 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதை செய்யாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

88

இதையடுத்து இப்பாடலை வெளியிட்ட சரிகம நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மதுபன் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை நீக்கிவிட்டு மீண்டும் இப்பாடல் புதிய வடிவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் இந்துக்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved