MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Maddy மற்றும் Modi உடன் செல்பி எடுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் - மாதவன் ஷேர் பண்ணிய மெர்சல் மொமண்ட்

Maddy மற்றும் Modi உடன் செல்பி எடுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் - மாதவன் ஷேர் பண்ணிய மெர்சல் மொமண்ட்

நடிகர் மாதவன், இமானுவேல் மேக்ரானிடம் செல்பி கேட்டவுடன் அவரே போனை வாங்கி செல்பி எடுத்த அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2023, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், லுவ்ரே மியூசியத்தில் வைத்து விருந்தளித்தார். இந்த விருந்தில் பிரான்ஸ் மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன.

24

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கொடுத்த இந்த விருந்தில் நடிகரும், இயக்குனருமான மாதவனும் கலந்துகொண்டார். அப்போது ஒரு அழகிய தருணமும் நிகழ்ந்தது. பிரான்ஸ் அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் உணவருந்தியபடியே உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற மாதவன், இருவருடனும் செல்பி எடுக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... விருந்தில் விதிமுறைகளை பிரதமர் மோடிக்காக தளர்த்திக் கொண்ட பிரான்ஸ்; விருந்தில் இதுவும் இடம் பெற்றது!!

34

இதற்கு உடனே ஓகே சொன்ன பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போனை வாங்கி தானே செல்பி  எடுத்தார். மோடி மற்றும் மாதவன் அவரது செல்பிக்கு போஸ் கொடுத்த அழகிய தருணம் அரங்கேறியது. இதனால் உற்சாகத்தில் திளைத்து போன மாதவன், இமானுவேல் மேக்ரான் எடுத்த செல்பி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

44

பிரதமர் மோடி மற்றும் இமானுவேல் மேக்ரான் உடன் செல்பி எடுத்த இந்த தருணம் என்றென்றும் என் மனதில் இடம்பிடித்திருக்கும். இருவரின் பணிவும் நம்பமுடியாத பாடத்தை கற்றுத்தந்தது. பிரான்சும் இந்தியாவும் என்றென்றும் ஒன்றாக செழிக்கட்டும் என மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். மாதவன் பகிர்ந்த இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... மூன்று புதிய ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள்! இந்தியா - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நரேந்திர மோடி
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image2
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image3
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved