நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’! ரிலீஸ் தேதி அறிவிப்பு
சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nayanthara's Test Movie OTT Release Date : மாதவனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் டெஸ்ட். சசிகாந்த் இயக்கிய இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டாக்ஸிக், ராக்காயி, டியர் ஸ்டூடண்ட், மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதுதவிர நயன்தாரா நடித்து நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாத படமொன்றும் இருக்கிறது. அது தான் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். தயாரிப்பாளரான சசிகாந்த் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் அவர் இயக்கி முதல் படம் இந்த டெஸ்ட்.
Test movie
டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதில் நடிகை நயன்தாரா, குமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். பாடகியான இவர், இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!
Test Movie Release Date
டெஸ்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 4ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல வருட காத்திருப்புக்கு பின்னர் டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.
Nayanthara
நடிகை நயன்தாரா நடித்து நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 4வது படம் இதுவாகும். இதற்கு முன்னர் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், ஓ2 ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அந்த வரிசையில் டெஸ்ட் திரைப்படம் இணைந்துள்ளது. இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள அதே மாதத்தில் தான் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைக்கு வர உள்ளது. அப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரம்மாண்டமாக நடந்த நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 பூஜை! படத்தில் இத்தனை பிரபலங்களா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.