சிவகார்த்திகேயனின் மதராஸி டிரைலர் விமர்சனம் – ஓ இதுதான் படத்தோட கதையா?
Madharaasi Trailer Review : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.v

மதராஸி டிரைலர் - விமர்சனம்
Madharaasi Trailer Review : இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் காம்பினேஷன்ல் முதல் முறையாக உருவான படம் தான் மதராஸி. விஜய்யின் மாஸான இயக்குநரான முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கொடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் காம்பினேஷன்
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கப்படவில்லை.
சிவகார்த்திகேயன் மதராஸி டிரைலர்
மேலும், மதராஸி படத்தில் வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், பிரேம் கூமார், சாச்சனா நேமிதாஸ், சந்தான பாரதி, தலைவாசல் விஜய், சஞ்சய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டிரைலரை வைத்து இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று பலரும் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படம் வழக்கம் போல் ஹீரோ மற்றும் வில்லனுக்கான இடையிலான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அத்துமீறி தமிழகத்திற்குள் ஆயுதங்களை கடத்தி வரும் கும்பலானது ஹீரோவின் காதலியான ருக்மினியை கடத்தி சென்றுவிடுகிறது.
மதராஸி டிரைலர் விமர்சனம்
ஒரு புறம் ஆயுதங்களை தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க தமிழ்நாடு போலீஸ் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஹீரோயினை காப்பாற்ற ஹீரோ எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தோட கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்று ஏராளமான கதைகள் கொண்ட படங்கள் திரைக்கு வந்திருந்தாலும் வித்தியாசமான கோணத்தில் இயக்குநர் முருகதாஸ் இந்தப் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.