MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் டம்மியான மதராஸி... அமரன் பட வசூலில் பாதி கூட கிடைக்கல..!

முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் டம்மியான மதராஸி... அமரன் பட வசூலில் பாதி கூட கிடைக்கல..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள மதராஸி திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2025, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Madharaasi Day 1 Box Office
Image Credit : Film

Madharaasi Day 1 Box Office

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் தான் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமால் இப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மதராஸி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மதராஸி படம் எப்படி இருக்கு?
Image Credit : X/Sri Lakshmi Movies

மதராஸி படம் எப்படி இருக்கு?

அமரன் படத்தின் அமோக வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாகவே மதராஸி உள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தர்பார், சிக்கந்தர் என வரிசையாக இரண்டு தோல்விப் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு மதராஸி ஒரு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இப்படம் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பக்கா ட்ரீட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஆகஷன் காட்சிகளில் மிரட்டி இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

34
மதராஸி பாக்ஸ் ஆபிஸ்
Image Credit : X/Sri Lakshmi Movies

மதராஸி பாக்ஸ் ஆபிஸ்

மதராஸி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகளவில் 18.52 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 9.5 கோடி வசூலித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.4 கோடியும், கேரளாவில் 85 லட்சமும், கர்நாடகாவில் 57 லட்சமும், இதர மாநிலங்களில் 1.5 கோடியும் வசூலித்துள்ள இப்படம் வெளிநாடுகளில் ரூ.4.7 கோடி வசூலித்து இருக்கிறது. அமரன் திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான வசூல் ஆகும்.

44
அமரன் வசூல் பாதி கூட வசூலிக்காத மதராஸி
Image Credit : X/Sri Lakshmi Movies

அமரன் வசூல் பாதி கூட வசூலிக்காத மதராஸி

அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது. அப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. சிவகார்த்திகேயன் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்திருந்தது. இந்த வசூலில் மதராஸி படம் பாதி கூட கலெக்‌ஷன் செய்யவில்லை. இருப்பினும் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படம் இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் மதராஸி படத்தின் வசூல் மேலும் அதிகாரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதராஸி
சிவகார்த்திகேயன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Related Stories
Recommended image1
மதராஸி விமர்சனம் : சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணி சாதித்ததா? சோதித்ததா?
Recommended image2
செப்டம்பர் மாதம் செம ட்ரீட் வெயிட்டிங்... மதராஸி முதல் கிஸ் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved