2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. 6 மாத கர்ப்பம் தான் காரணமா?
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சின்னத்திரை உலகில் ‘Cooku with Comali’ நிகழ்ச்சியின் மூலம் மிகுந்த புகழை பெற்றவர். சமையல் மாஸ்டராக மட்டுமின்றி, 2019-ம் ஆண்டு வெளியான மெஹெந்தி சர்க்கார் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
அந்தப் படத்திற்குப் பிறகு திரைத்துறையைக் காட்டிலும் சமையல் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் என்றே கூறலாம். சமையல்துறையில் இன்று மிகப்பெரிய பிரபலங்களின் இல்ல திருமணங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் என அனைத்து விருந்துகளுக்கும் ரங்கராஜ் தான் முதன்மையானவர் தேர்வாக உள்ளார்.
குக் வித் கோமாளி
அவரை நிகழ்ச்சிக்கு அழைப்பதற்கான கட்டணம் லட்சக்கணக்கில் இருந்தாலும், அவரது ருசிக்காக பலரும் தயங்காமல் ஒப்புக்கொள்கிறார்கள். இவரது சமையல் பட்டியலின் வெற்றி, அவரின் சமையல் சுவை மட்டும் அல்லாமல், அவருடைய எளிமை, நேர்த்தியும் கூட காரணமாக இருக்கின்றன. சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாகவே ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகியோருக்கிடையே கிசுகிசுக்கள் வெளியானது.
ரங்கராஜ் லேட்டஸ்ட் திருமண விவரம்
மேலும், ரங்கராஜ் தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து செய்த தகவல்களும் பரவியிருந்தன. தற்போது அதனை உண்மை என உறுதி செய்யும் வகையில் இந்த திருமணம் நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிரிசில்டா திருமண செய்தியை பகிர்ந்ததோடு, ரங்கராஜை “மை மேன்” எனக் குறிப்பிட்டதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா கர்ப்பம்
கோவிலில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாகவும் பாரம்பரிய முறையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.