- Home
- Cinema
- ஃப்ரீ பிளானோடு களமிறங்கிய ஜாய் கிரிசில்டா – இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; மாதம்பட்டிக்கு செக்!
ஃப்ரீ பிளானோடு களமிறங்கிய ஜாய் கிரிசில்டா – இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; மாதம்பட்டிக்கு செக்!
Madhampatty Rangaraj in Dangerous Situation : மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான ஒவ்வொரு ஆதாரத்தையும் ஜாய் கிரிசில்டா இப்போது ஒவ்வொன்றாக வெளியிட தொடங்கிவிட்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
சினிமாவாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் எந்தளவிற்கு உச்சத்திற்கு செல்கிறோமோ அதைவிட அடிமட்ட அளவிற்கு செல்லும் நிலை கூட வரலாம். அது காசு, பணமாக இருந்தாலும் சரி, பேரும், புகழுமாக இருந்தாலும் சரி தான். அதற்கு சிறந்த உதாரணே மாதம்பட்டி ரங்கராஜ். எப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான சமையல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதோ அப்போதே அவரது பேரும் புகழும் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜின் கை பக்குவம் ருசி கொடுக்க அடுத்ததடுத்த லெவலுக்கு உயர்ந்தார். இந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசனில் நடுவராக எண்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த சீசனில் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தார். அதற்கு காரணம் அவருக்கு மீடியா முன்பு எப்படி பேச வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை.
தற்போது ஓரளவு சமாளித்து வருகிறார். அதற்கு முன்னதாக வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து கலக்கிய அளவிற்கு கூட மாதம்பட்டி ரங்கராஜ் அளவிற்கு ஃபெர்மான்ஸ் செய்யமுடியவில்லை. தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், அந்த ஷோவிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணமும் உண்டு.
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜிற்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் 2ஆவதாக கடந்த மாதம் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்திற்கு முன்பும், சரி, திருமணத்திற்கு பின்பும் சரி மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கிரிசில்டா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணமாகி ஒரு மாசத்திற்குள்ளாக தனது கணவர் வீட்டிற்கே வருவதில்லை என்றும், தன்னை பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான அலப்பறை வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரங்கராஜ் ஹேய் பொண்டாட்டி ஐ லவ் யூ வீட்டுக்கு போனேன் திரும்ப வந்தேன் இண்டர்வியூ முடிந்தது. மீட்டிங் இருக்கு என்று பேசுகிறார். இது போன்று இன்னும் எத்தனை வீடியோக்கள் இருக்கிறது என்பது பற்றி அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.
மேலும், இருவரும் கோயிலில் திருமணம் செய்த நிலையில் திருமணம் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. கிரிசில்டாவின் புகாரைத் தொடர்ந்து ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்று மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறார். மேலும், தன்னைப் பற்றி வரும் நெகட்டிவிட்டிக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை என்று கூறிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.