விஷாலை என் வாழ்க்கையில் திரும்ப பார்க்கவே கூடாதுனு நினைச்சேன் - சுந்தர் சி ஓபன் டாக்
மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சுந்தர் சி, விஷால் பற்றி ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி இருக்கிறார்.
Vishal, Sundar C
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் நடிகர் விஷால் உடன் முதன்முதலாக இணைந்து பணியாற்றிய படம் மத கஜ ராஜா. அப்படம் சில காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாததால், கடந்த 2015-ம் ஆண்டு உருவான ஆம்பள படமே விஷால் - சுந்தர் சி காம்போவின் முதல் படமாக அமைந்தது. ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஆக்ஷன் என்கிற திரைப்படத்தில் பணியாற்றினர். இப்படம் தோல்வி அடைந்தது.
Vishal
இந்த நிலையில், விஷாலும், சுந்தர் சி-யும் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய படமான மத கஜ ராஜா, தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வருகிற ஜனவரி 12ந் தேதி பொங்கல் விருந்தாக அப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆவதால் விஷால், சுந்தர் சி ஆகியோர் செம சந்தோஷத்தில் உள்ளனர். அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பாலாவால் வந்த வினை; தீய பழக்கங்கள் - விஷால் நிலைமைக்கு காரணம் இதுதான்? பகீர் கிளப்பிய பிரபலம்!
Madha Gaja Raja
அந்த வகையில் மத கஜ ராஜா புரமோஷனில் கலந்துகொண்ட சுந்தர் சி நடிகர் விஷால் உடனான நட்பு பற்றி நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார். ஆரம்பத்தில் விஷால் அந்த அளவுக்கு சுந்தர் சி உடன் நெருக்கம் இல்லையாம். ஆனால் குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி-யும் கதையை சொல்ல விஷாலின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். ஆனால் இவர்கள் வரும் முன் விஷால் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம். இதனால் அங்கு வந்த ஏமாற்றம் அடைந்த சுந்தர் சி, மிகவும் அப்செட் ஆனாராம்.
Vishal, Khushbu
பின்னர் கோபத்தில் வீட்டுக்கு வந்த குஷ்புவிடம் நடந்ததை கூறி இருக்கிறார் சுந்தர் சி. அப்போது கூட குஷ்பு விஷாலுக்கு ஆதரவாக பேசி, தான் போன் போட்டு தருவதாக கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு நோ சொன்ன சுந்தர் சி, இனிமே விஷாலை தன் வாழ்க்கையில் திரும்ப பார்க்கவே கூடாது அவருடன் படம் பண்னவே கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சுந்தர் சி கலந்துகொள்ள சென்றபோது அங்கு விஷாலும் வந்திருக்கிறார்.
Vishal Sundar C Friendship
அப்போது விஷாலை பார்க்க கூடாது என முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்த சுந்தர் சி-யிடம் நேராக வந்து கையை பிடித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் விஷால். அதன்பின்னர் தான் அன்று கதை சொல்ல சென்றபோது குடும்பத்தினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்ததால் விஷால் அவசர அவசரமாக சென்றது தெரிய வந்தது. நான் நிறைய ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் கார்த்திக்கை என் அண்ணனாக ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் விஷாலை தான் என் தம்பியாக ஏற்றுக்கொண்டேன் என கூறி உள்ளார் சுந்தர் சி. அவரின் பேச்சை கேட்டு விஷால் கண்கலங்கினார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் அரை டஜன் படங்கள்