முழுவீச்சில் நடைபெறும் மாவீரன் Promotion.. சென்னையில் நடந்த பிரஸ் மீட் - சில கூல் கிளிக்ஸ்!
பரத் சங்கர் இசையில் அதிதி சங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் குரலில் வெளியான "வண்ணாரப்பேட்டையில" பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு மாவீரன் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
Breaking: விஜய் திரையுலகில் இருந்து தற்காலிக விலகல்? மாவட்ட பொறுப்பாளர்களுடன் திடீர் சந்திப்பு!
பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தை தயாரிக்க, மாவீரனாக சிவகார்த்திகேயனும், அவருடைய நாயகியாக அதிதி சங்கரும், வெகுநாட்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் மூத்த நடிகை சரிதா சிவகார்த்திகேயனின் தாயாகவும் நடித்துள்ளார். அதே சமயத்தில் வழக்கம் போல சிவாவுடன் நகைச்சுவை கலாட்டா செய்ய யோகி பாபுவும் களமிறங்கவுள்ளார்.
பரத் சங்கர் இசையில் அதிதி சங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் குரலில் வெளியான "வண்ணாரப்பேட்டையில" பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.
இந்த படத்தின் கூடுதல் சிறப்பாக ஒரு அரசியல்வாதியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியுள்ளார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்திற்காக பெரிய அளவில் உழைத்து உள்ளார் என்றும். தன்னை அவருக்கு ஒரு கதை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் கூறினார்.
தம்பி கேட்டு அண்ணன் முடியாது என்று சொல்ல முடியாததால், நிச்சயம் அவருடைய ஸ்டைலையும் என்னுடைய ஸ்டைலையும் இணைத்து ஒரு படம் விரைவில் உருவாகும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் உலகெங்கிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். தற்பொழுது சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டாராக மாறிவரும் சிவகார்த்திகேயனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளாடை சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்து விரட்டியடித்த பிரியா பவானி சங்கர்