பாடல்கள் மூலம் பாடமெடுத்த வைரமுத்து; அவர் பாடலில் ஒளிந்திருக்கும் சயின்ஸ் பற்றி தெரியுமா?
கவிஞர் வைரமுத்து தன்னுடைய பாடல்களில் பல்வேறு புதுமைகளை புகுத்துவார் என்பது அனைவருக்கு தெரியும், அப்படி அவர் அறிவியல் அறிவோடு எழுதிய சில பாடல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Vairamuthu Song Secret
சினிமாவில் பாடல்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் புதுப் பாடல்களைவிட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. இதனால் தற்போது வரும் படங்களெல்லாம் பழைய பாடல்கள் இல்லாமல் ரிலீஸ் ஆவதில்லை. அப்படி பழைய பாடல்கள் நம்மை ஈர்த்ததற்கு அப்பாடலில் உள்ள கவித்துவமான வரிகளும் காரணம். அப்படி தமிழில் பல்வேறு மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வைரமுத்து, தன் பாடலின் மூலம் அறிவியல் பாடமெடுத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
அறிவியல் அறிவை வெளிப்படுத்திய வைரமுத்து
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அப்படி அவரது இசையில் கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த படம் சிகரம். அப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் rayleigh scattering என்கிற விஷயத்தை பயன்படுத்தி இருக்கிறார். எஸ்.பி.பியின் இசையில் வைரமுத்து எழுதி வெளியான ‘வண்ணம் கொண்ட வென்னிலவே வானம் தாண்டி வாராயோ’ என்கிற பாடலில் தான் தன்னுடைய அறிவியல் அறிவை வெளிப்படுத்தி இருப்பார் வைரமுத்து.
வைரமுத்து பாடலில் Physics
இந்த பாடலின் பல்லவியில் வைரமுத்து ஒரு வரி எழுதி இருப்பார். அது என்னவென்றால், ‘நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை’ என்கிற வரி. இந்த வரியில் தான் rayleigh scattering அடங்கி உள்ளது. வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்றால், சூரிய ஒளி வரும்போது, அதில் ஏற்படும் ஒளிச்சிதறல்கள் காரணமாக தான் வானம் நீல நிறத்தில் இருக்கிறது என்கிற அறிவியலை இந்த பாடலில் மிக அழகாக ஒரே வரியில் எழுதி இருக்கிறார் வைரமுத்து.
வைரமுத்து பாடல் கற்றுத்தரும் அறிவியல்
அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இடம்பெற்ற இன்னிசை பாடி வரும் பாடலிலும் பல்லவியிலேயே சயின்ஸை எழுதி இருப்பார் வைரமுத்து. அப்பாடலில் ‘காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். காற்றின் மூலம் பயணிக்கும் ஒலி அலைகளினால் தான் நம்மால் சத்தங்களை கேட்க முடிகிறது என்கிற அறிவியலை இந்த பாட்டின் பல்லவியிலேயே ஒரே வரியில் புரியும் படி எழுதி இருக்கிறார் வைரமுத்து.