என்ன, இதெல்லாம் வாலி பாட்டு இல்லையா? கோலிவுட்டில் மெகா ஹிட் பாடல்களை எழுதிய "மறக்கப்பட்ட லிரிஸிஸ்ட"!
Lyricist Muthu Vijayan : தமிழ் திரையுலகை பொறுத்தவரை மெகா ஹிட்டான பல பாடல்களை நாம் எதிரே பார்க்காத பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்கள்.
Lyricist Vaali
வாலி
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர் தான் வாலி. கடந்த 1959ம் ஆண்டு தமிழில் வெளியான "அழகர் மலை கள்வன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாடலாசிரியராக தமிழ் திரையுலையில் களமிறங்கினார். இன்றளவும் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரின் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய பெருமை வாலியையே சேரும்.
அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக வாலியின் திரையிசை பாடல்கள் இருந்தது என்றே கூறலாம். அன்று தொடங்கி இன்று திரைத்துறையில் உச்ச நடிகர்களாக இருக்கும் இளம் கதாநாயகர்கள் வரை, பலருக்கு நல்ல பல பாடல்களை எழுதியவர் வாலி. இறுதியாக கடந்த 2014 தமிழில் வெளியான "யான்" என்கின்ற திரைப்படத்தில் தான் அவருடைய இறுதி பாடல்கள் ஒலித்தது. வாலி 2013ம் ஆண்டு மறைந்த நிலையி, அவர் மறைவுக்கு பிறகு அவர் எழுத்தில் உருவான 8 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!
Meghamai Vanthu Pokiren
முத்து விஜயன்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிகரற்ற ஒரு பாடல் ஆசிரியர் வாலி என்றாலும், தமிழ் ரசிகர்கள் வெகு சீக்கிரத்தில் மறந்து விட்ட சில பாடல் ஆசிரியர்களும் நல்ல பல பாடல்களை கோலிவுட் உலகில் கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு மறைந்த பிரபல பாடல் ஆசிரியர் தான் முத்து விஜயன். இவர் பல நல்ல திரைப்பட பாடல்கள் எழுதி இருந்தாலும், குறிப்பாக இவருடைய இரண்டு பாடல்கள் பலமுறை வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்களாக ரசிகர்களால் இனம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "துள்ளாத மனமும் துள்ளும்" என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த "மேகமாய் வந்து போகிறேன்" என்கின்ற பாடலை எழுதியது இவர் தான். தளபதி விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள், அதில் "காக்கைச் சிறகினிலே" என்ற பாரதியாரின் பாடல் ஒன்றும் அமைந்திருக்கும். அதை தவிர இந்த படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களில் ஆறு பாடல்களை எழுதியது வைரமுத்து தான். "மேகமாய் வந்து போகிறேன்" என்கின்ற அந்த ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதியது முத்து விஜயன். ராஜேஷ் கிருஷ்ணன் குரலில் ஒலித்த அந்த பாடல் இன்றளவும் பலரது Favorite பாடலாக உள்ளது.
Kannukulle unnai vaithen
அதேபோல கடந்த 2000வது ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான திரைப்படம் தான் "பெண்ணின் மனதை தொட்டு". இந்த திரைப்படத்தில் உருவான ஆறு பாடல்களில் இரண்டு பாடல்களை எழுதியது வாலி, ஒரு பாடலை எழுதியது வைரமுத்து, மற்றொரு பாடலை அப்பிடத்தின் இசையமைப்பாளர்கள் ராஜ்குமார் அவர்களே எழுதியிருந்தார். அதை தவிர மீதம் இருக்கும் இரண்டு பாடல்களை எழுதியது பாடல் ஆசிரியர் முத்து விஜயன் தான்.
"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" என்ற பாடலை இரண்டு விதமாக இந்த படத்திற்காக முத்து விஜயன் எழுதியிருப்பார். ஒரு பாடலை உன்னிகிருஷ்ணனும், ஒரு பாடலை உன்னி மேனனும் பாடி அசத்தியிருப்பார். இந்த பாடல்கள் வெளியாகி சுமார் 24 ஆண்டுகள் கடந்து விட்டது என்றாலும், பலருக்கும் மிக மிக பிடித்த பாடல்களில் இவையும் ஒன்றாக இருக்கும்.
Lyricist Muthu Vijayan
இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்ல தளபதி விஜயின் "நெஞ்சினிலே" என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த "அன்பே அன்பே" என்கின்ற பாடல், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவான கள்வனின் காதலி திரைப்படத்தில் ஒலித்த "இவன் காட்டில்" என்கின்ற பாடலையும், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் "தென்னவன்" திரைப்படத்தில் ஒலித்த "வட்ட வட்ட நிலவுக்கு" என்ற பாடலையும் எழுதியது முத்து விஜயன் தான்.
இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பின் மெல்ல மெல்ல பாடல்களை எழுத தொடங்கி மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் வளர்ந்து வந்தார். தன்னுடன் இணைந்து பணியாற்றி வந்த கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து கொண்டு, பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயினால் அவர் காலமானார்.