பாலிவுட்டில் பல்பு வாங்கிய லவ் டுடே ரீமேக்; ஆத்தாடி இத்தனை கோடி நஷ்டமா?
லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கான லவ் யப்பா படத்தில் ஜுனைத் கானும் குஷி கபூரும் நடித்திருந்த நிலையில் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்துள்ளது.

லவ் டுடெ இந்தி ரீமேக் லவ் யப்பா
பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த படம் லவ் டுடே. இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். காதலர்கள் தங்கள் இருவரின் போனை மாற்றிக் கொண்டதால் ஏற்படும் பின் விளைவுகளை நகைச்சுவையும் சொல்லி இருந்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
லவ் யப்பா வசூல்
தமிழில் லவ் டுடே படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அதன் ரீமேக் உரிமையை மற்ற மொழிகளிலும் போட்டி போட்டு வாங்கினர். அந்த வகையில் அப்படம் இந்தியில் லவ் யப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டத்து. இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி இருந்தார். இதில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானும், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஜோடியாக நடித்திருந்தனர். லவ் யப்பா திரைப்படம் கடந்த பிப்ரவரி 7ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... என்னை பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணுனாங்க; வேதனையை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்!
லவ் யப்பா படுதோல்வி
தமிழில் இப்படம் சக்கைப்போடு போட்டதால் இந்தி ஆடியன்ஸையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லவ் யப்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து உள்ளதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் யப்பா திரைப்படம் உலகளவில் எட்டு நாட்களில் வெறும் 8.68 கோடி ரூபாதான் வசூலித்துள்ளதாம். இதனால படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய டிசாஸ்டர் என்றே கூறப்படுகிறது.
லவ் யப்பா படம் நஷ்டம்
காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் ஆன இந்தப் படம் பிப்ரவரி 14ந் தேதி வெறும் 16 லட்சம்தான் வசூலிச்சிருக்கு. காதல் கதையில வந்த படத்துக்கு இவ்ளோ குறைவான வசூல் வந்துள்ளது படக்குழுவினரையே அதிர்ச்சியடைய வச்சிருக்கு. ஆமிர் கானோட மகனும் ஸ்ரீதேவியோட இரண்டாவது மகளும் நடிச்ச படம்னு எதிர்பார்ப்பு இருந்தாலும், ரீமேக் படங்கறதால ரசிகர்களை ஈர்க்க முடியலன்னு சினிமா வட்டாரங்கள் சொல்லுது. இந்த மாதிரி போனா படம் 10 கோடியைக் கூட தொட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. மேலும் இது ரூ.50 கோடி வரை நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாம்.
நெட்ஃபிளிக்ஸ்ல வெளியான மகாராஜ் படத்துக்கு பின் ஜுனைத் கான் நடிச்சு முதல் முறையாக தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் தான் இந்த லவ் பயா. அதேபோல் ஸ்ரீதேவி மகள் குஷி கபூரும் இதற்கு முன் நெட்ஃபிளிக்ஸ் சீரிஸான ஆர்ச்சர்ஸில் நடித்திருந்தார். அதன்பின் அவர் நடித்து தியேட்டரில் ரிலீஸ் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரதீப்பை கோடீஸ்வரன் ஆக்கிய கோமாளி; அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?