MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 35 வயதில் தன்னை விட வயதில் குறைந்த நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே வைரலாகும் டேட்டிங் போட்டோஸ்!

35 வயதில் தன்னை விட வயதில் குறைந்த நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே வைரலாகும் டேட்டிங் போட்டோஸ்!

Pooja Hegde clicks with a younger actor go viral: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே, இளம் நடிகருடன் அடிக்கடி வெளியே தோன்றுவதால், அந்த நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 30 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முகமூடி படத்தில் அறிமுகம்:
Image Credit : social media photos

முகமூடி படத்தில் அறிமுகம்:

தமிழ் சினிமாவில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ரிலீஸ் ஆன 'முகமூடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து, தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரை மீண்டும் 'பீஸ்ட்' படத்தின் மூலம், தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இந்த படமும் தோல்வியை தழுவிய நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஜனநாயகன்:
Image Credit : social media photos

ஜனநாயகன்:

மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக, அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், ரிலீசுக்கு முன்பே சமூக வலைத்தளத்தில் வெளியாகி... ரசிகர்களையும், படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்தது. அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் நடிப்பதில் தற்போது பூஜா ஹெக்டே பிசியாகி உள்ளார்.

36
இளைய வயது நடிகருடன் டேட்டிங்:
Image Credit : social media photos

இளைய வயது நடிகருடன் டேட்டிங்:

35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் பூஜா ஹெக்டே தன்னை விட இளைய வயது நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆதாவது கடந்த மாதங்களாகவே பூஜா ஹெக்டே மற்றும் ரோஹன் மெஹ்ரா ஆகியோர், டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன. இப்போது, இந்த உறவு உண்மையானது என்றும், அவர்கள் சில ஆண்டுகளாக காதலில் வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

46
 தனிப்பட்ட வாழ்க்கை:
Image Credit : social media photos

தனிப்பட்ட வாழ்க்கை:

இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதும், நண்பர்களின் வட்டாரத்திலும் சேர்ந்து காணப்பட்டதும் இந்த வதந்தியை உறுதி செய்வது போல் உள்ளது. பூஜா ஹெக்டே பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக பகிராதவர். அவர் அதிகமாக தனது வேலை மற்றும் திரைப்படங்களின் மீதே கவனம் செலுத்துபவர் என்கிற பெயரையும் பெற்றுள்ளார். அதனால் தான், இந்த காதல் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது பலரும் அதைப் பற்றி ஆச்சரியமாகக் கண்டனர்.

56
ரோஹன் மெஹ்ரா:
Image Credit : social media photos

ரோஹன் மெஹ்ரா:

முன்னதாக, அவர் “கிஸி கா பாய் கிஸி கி ஜான்” திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் சல்மான் கானுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவியது. பின்னர் அவை வெறும் வதந்திகள் மட்டுமே என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து தற்போது பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நடிகர் ரோஹன் மெஹ்ரா, பழம்பெரும் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு வெளியான “பஜார்” திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரோஹன், நடிகராக வருவதற்கு முன்பு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பாஜீராவ் மஸ்தானி” திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

66
பூஜா என்ன விளக்கம் கொடுப்பார்?
Image Credit : social media photos

பூஜா என்ன விளக்கம் கொடுப்பார்?

பூஜா ஹெக்டே தற்போது தன்னுடைய அடுத்த படமான “ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் வருண் தவான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குநர் டேவிட் தவான் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், மே 22, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்ட் தன்னை விட இரண்டு வயது குறைவான ரோஹன் மெஹ்ராவை காதலிப்பது தான், பாலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. எனினும் இது குறித்து பூஜா என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பூஜா ஹெக்டே
தளபதி விஜய்
தமிழ் சினிமா
ஜன நாயகன்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : வசூலில் திரிஷ்யம் 3-ஐ முந்தியதா கருப்பு? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Recommended image3
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved