சமந்தா - நயன்தாராவின் கலவையோ... ஒவ்வொரு போஸிலும் வியக்க வைக்கும் நடிகை அதுல்யா..! கியூட் போட்டோஸ்..
நடிகை அதுல்யா (Athulyaa Ravi) கைவசம் தற்போது சில படங்கள் இருந்தாலும், இவரது டார்கெட் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். இதற்காக விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது கியூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...” அஞ்சலி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய டவல் மட்டும் காட்டியது போன்ற மாடர்ன் உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் அழகிய சேலை மற்றும் சிவப்பு நிற சல்வாரில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
ஏற்கனவே இவரை பார்க்க சமந்தா, போன்றும் நயன்தாரா போன்றும் இருப்பதாக கூறி வரும் நெட்டிசன்கள்... இந்த புகைப்படங்களில் இவருடைய அழகை வர்ணித்து வருகிறார்கள்.
சும்மா ரெட் வெல்வெட் கேக் போன்று, நடிகை அதுல்யா ரவி எப்படி போஸ் கொடுக்கிறார் என்பதை நீங்களே பாருங்க...