MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நோ வயலன்ஸ்; அடுத்ததாக ரொமாண்டிக் படம் எடுக்கும் லோகேஷ்; ஹீரோ யார் தெரியுமா?

நோ வயலன்ஸ்; அடுத்ததாக ரொமாண்டிக் படம் எடுக்கும் லோகேஷ்; ஹீரோ யார் தெரியுமா?

கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி 2 படத்தை முடித்துவிட்டு ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படத்தை இயக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூலி டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

கூலி டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

கோலிவுட்டில் நம்பர் 1 இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதையடுத்து ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

24
கைதி 2 லோடிங்

கைதி 2 லோடிங்

கூலி படத்தை முடித்ததும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளாராம். இது ஒரு எல்சியூ படம் ஆகும்.

இதையும் படியுங்கள்... கோலிவுட் போர் அடித்துவிட்டதா? தமிழ் இயக்குனர்கள் பாலிவுட்டுக்கு படையெடுப்பதன் பின்னணி என்ன?

34
லோகேஷ் கனகராஜ் பாலிவுட் எண்ட்ரி

லோகேஷ் கனகராஜ் பாலிவுட் எண்ட்ரி

கைதி 2 படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது தான் புரியாத புதிராக இருந்து வந்தது. ஏனெனில் அவர் கைவசம் விக்ரம் 2, ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற படங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. பாலிவுட்டில் அமீர்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

44
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ்

ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக, கைதி 2 படத்தை முடித்த கையோடு தனுஷுடன் லோகி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆக்‌ஷன் படங்களாக இயக்கி வந்த லோகேஷ், தனுஷிடம் ரொமாண்டிக் கதை ஒன்றை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறாராம். தற்போது லோகியை போல் தனுஷும் செம பிசியாக நடித்து வருவதால் இருவரும் தங்கள் கமிட்மெண்ட்டுகளை முடித்த பின்னர் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... ஹீரோயின் உடன் உருவாகும் கைதி 2! கார்த்திக்கு ஜோடி இவரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved