- Home
- Cinema
- ஆளவிடுங்கடா சாமி... எஸ்கேப் ஆன லோகேஷ்..! ரஜினி - கமல் இணையும் படம் யாருக்கு கைமாறியது தெரியுமா?
ஆளவிடுங்கடா சாமி... எஸ்கேப் ஆன லோகேஷ்..! ரஜினி - கமல் இணையும் படம் யாருக்கு கைமாறியது தெரியுமா?
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் 46 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்க உள்ள படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி உள்ளதாகவும், அவருக்கு பதில் அப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் பற்றிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

Rajini - Kamal Movie Director
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த கனவு நனவாகப் போகிறது. இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மல்டிஸ்டாரர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். சமீபத்தில் கமல்ஹாசனே இதை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தாங்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணி
சமீபத்தில் நடந்த சைமா விருதுகள் (SIIMA Awards) வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் இதுகுறித்து பேசுகையில் “எங்கள் கூட்டணியை ரசிகர்கள் விரும்பினால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்தோம், ஆனால் அது நடக்கவில்லை. விரைவில் உங்கள் முன் ஒன்றாக வருவோம். இது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கும்” என்று அவர் தெளிவாகக் கூறினார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வந்த செய்திகள் குறித்துப் பேசிய கமல், “எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. இவையெல்லாம் நீங்கள் உருவாக்கியவை. நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாகப் பார்த்ததில்லை. ஒருவர் படங்களை மற்றவர் தயாரிக்கவும் முயற்சி செய்தோம்” என்று விளக்கமளித்தார்.
லோகேஷ் கனகராஜ் விலகினாரா?
இந்த பிரம்மாண்ட மல்டிஸ்டாரர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் ரஜினிகாந்தின் பேட்டி அதை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. கமலுடன் படம் நடிக்கப் போவதாகவும் அதை ரெட் ஜெயண்டும், ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்க உள்ளதாகவும் சொன்ன ரஜினிகாந்த் “இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியதால் சஸ்பென்ஸ் அதிகரித்துள்ளது. இருவரும் இயக்குனர் பெயர் குறித்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால், இந்த இரு ஜாம்பவான்களையும் இயக்கும் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
ரஜினி - கமல் படத்தை இயக்கப்போவது இவரா?
தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ரஜினி - கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏனெனில் தற்போது பிரதீப் ரங்கநாதன் கைவசம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூடு ஆகிய படங்கள் உள்ளன. அவை இரண்டுமே ஷூட்டிங் முடிந்துவிட்டன. இருப்பினும் அடுத்த படம் என்ன என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் பிரதீப். அநேகமான அது ரஜினி - கமல் இணையும் படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 1970-களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதன் பிறகு இருவரும் தனித்தனியாகப் பயணிக்கத் தொடங்கினர். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணியைக் காணப் போவதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.