கமலின் அடுத்த பட டைரக்டர் யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் சொன்ன "அடிப்பொலி" அப்டேட்!
மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாக விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

vikram movie
நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு வரும் ஜூன் 3-ம் தேதி கமலின் விக்ரம் வெளியாகவுள்ளது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
VIKRAM MOVIE
முதல் சிங்குளாக பத்தல பத்தல பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதோடு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பின்னர் சென்னையில் பிரமாண்டமாக டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த டிரைலரும் பூகம்பத்தை கிளப்பியது. இதில் ஒரு ஆபாச வசனம் ஒன்று இடம்பெற்று கமலை விமர்சனத்திற்கு ஆளாக்கியது.
VIKRAM
கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படம்தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
kamal next
இந்நிலையில் விக்ரம் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ், கமலின் அடுத்து பணியாற்றவுள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படம் குறித்து கமல் "அடிப்பொலி" என கூறியுள்ளதாகவும். இவர் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.