இதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன்! விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ள நிலையில், 'வாரிசு' படத்தை பார்த்த கையோடு, விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமான சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தளபதி விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்த 'வாரிசு' திரைப்படம் இன்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை... ஒரு ரசிகராக வந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பார்த்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் 'வாரிசு' படம் குறித்து கேட்டபோது, படம் மிகவும் தனக்கு பிடித்ததாகவும், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடும்பத்துடன் காண வேண்டிய அற்புதமான படம் 'வாரிசு' என தெரிவித்தார். அதேபோல், இந்த படத்தில் உள்ள காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!
இதை தொடர்ந்து தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்த எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கணகராஜ், 'வாரிசு' படத்தின் ரிலீசுக்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும், இனிமேல் தொடர்ச்சியாக தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மேலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், ஏதேனும் அப்டேட்டுகள் வெளியாகுமா என எதிர்பார்க்க துவங்கியுள்ளனர் தளபதியின் ரசிகர்கள். லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் அடிப்படையில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், நடிகை திரிஷா நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். லலித் குமார் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.