ஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' பட நாயகனா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!
தமிழ் சினிமாவில் நடிக்க கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு நடிகர் நடிகைகளும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் கடந்த 2001 ஆம் ஆண்டு, நடிகை ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் படத்தில், நடித்திருந்தனர் பென்ட்லி மிட்சம். இவரை தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நடிகரான பென்ட்லி மிட்சம், 1989 ஆம் ஆண்டு ஜெர்மன் மொழி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் நடிப்பு மிகவும் பாராட்ட பட்ட இவர் அடுத்தடுத்தது சில படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
தமிழில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்த போது முதலில் தயங்கினாலும் பின், இவரை சுற்றியே முழு கதையும் நகர்வதாலும், சுவாரஸ்யமான படம் என்பதால் ஒப்புக்கொடார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் அந்த படத்தில் நடித்த நடிகரா இவர் என யோசிக்க வைத்துள்ளது.
ஏகப்பட்ட மாற்றம் இருப்பது, இவருடைய தோற்றத்தில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் தான்.
பல வெற்றி படங்களில் நடித்த இவர், கடந்த 5 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார்.
மேலும் இதுவரை மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
கடைசியாக இவர் நடித்த தி ஒன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான இன்டெர்நேஷனல் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இவரின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படத்தில் சுத்தமா அடையாளம் தெரியல