காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் படமல்ல.. ஏற்கனவே இதே பாணியில் வெளியான ஹிட் மூவிஸ் இதோ..
விரைவில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் போலவே முக்கோண காதல் வடிவில் வெளியாகி ஹிட் கொடுத்த 11 படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்...

kadhal Desam
காதல் தேசம் :
996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தை கதிர் எழுதி இயக்கியிருந்தார். கேடி குஞ்சுமோனால் தயாரித்திருந்தார். இப்படத்தில் வினீத் , அப்பாஸ் , தபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நண்பர்களான இரு மாணவர்கள் தங்களுடன் படிக்கும் பெண்ணை ஒரு தலையாக காதல் செய்யும் உணர்வு மிகுந்த காட்சிகளுடன் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.
NINAITHEN VANDHAI
நினைத்தேன் வந்தாய் :
கடந்த 1998அம ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தை கே.செல்வ பாரதி இயக்கி இருந்தார். இதில் தளபதி விஜய், ரம்பா , தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நாயகனான கோகுலன் தனது கனவில் கண்ட பெண்ணான ஸ்வப்னாவை நேரில் சந்தித்து காதலில் விழுகிறார். அதே சமயம் ஸ்வப்னாவின் சகோதரி சாவித்திரியுடன் நாயகனுக்கு நிச்சயதார்த்தம் ஆகிறது. பின்னர் இரு சகோதரிகள் யார் யாருக்காக விட்டு கொடுக்க போகிறார்கள் எனபதே மீதி கதை.
UNNAI NINAITHU
உன்னை நினைத்து :
விக்ரமன் எழுதி இயக்கிய உன்னை நினைத்து படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது. சூர்யா , லைலா, சினேகா நடித்துள்ளனர். நல்ல விமர்சனங்களுடன் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. மேலும் பல இந்திய பிராந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதோடு இந்த படம் சூர்யாவின் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மற்றும் 175 நாட்கள் வெள்ளி விழா விழாவைக் கொண்டாடியது. இந்த படமும் இரு நாயகிகளுடன் முக்கோண காதல் கதையாகும்.
SHAHJAHAN
ஷாஜகான் :
தளபதி விஜய், கிருஷ்ணா மற்றும் நடித்துள்ளனர் ரிச்சா பல்லோட் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ரவி எழுதி இயக்கியுள்ளார். நாயகன் அசோக் இரண்டு காதலர்களுக்கு உதவுகிறார். பின்னர் தானும் ஒரு பெண்ணை காதலிக்க அந்த பெண்ணை நண்பனும் காதலிக்கிறார் என தெரியாமல் அவரின் காதலுக்கு உதவுகிறார்.
MOUNAM PESIYADHE
மௌனம் பேசியதே :
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே அமீர் இயக்கிய படமாகும். இதில் சூர்யா மற்றும் த்ரிஷா, லைலா ஆகியோர் முன்னணியில் நடித்துள்ளனர். நண்பனின் உறவுக்கார பெண்ணணக் த்ரிஷா தன்னை காதலிப்பதாக நினைக்கிறார் நாயகன். பின்னர் அவர் வேறொருவரை காதலிப்பது தெரிந்து அதிர்சியடிக்கிறார். ஆனால் உண்மையில் நாயகனிடம் காதல் வசனம் பேசியது லைலா என இறுதியில் அறிகிறார் நாயகன். இந்த படம் சூர்யாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
minnale
மின்னலே :
கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் மாதவன் , அப்பாஸ் , ரீமா நடித்திருந்தனர். தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை மாதவன் என நினைக்கும் ரீமா அவரிடம் நெருங்கி பழகுகிறார். பின்னர் சில நாட்களில் ஒரிஜினல் மாப்பிள்ளை அப்பாஸ் வர மாதவனை புறக்கணிக்கிறார் ரீமா. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் இன்றளவும் பிரபலமானவை.
MINSARA KANAVU
மின்சாரா கனவு :
அரவிந்த் சுவாமி , பிரபுதேவா மற்றும் கஜோல் ஆகியோர் நடித்திருந்த மின்சார கனவு படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். அரவிந்த் சாமிக்காக கன்னியாஸ்திரி ஆக விரும்பும் நாயகியின் மனதை மாற்றி திருமண ஆசையை உண்டாக்குவதற்காக வரும் பிரபு தேவா.. மெல்ல மெல்ல நாயகி மீது காதல் வயப்படுகிறார். பின்னர் யாரை நாயகி திருமணம் செய்வார் என்பதே படத்தின் மொத்த கதையும். இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
Iyarkai
இயற்கை :
கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தை எஸ்பி ஜனநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாம், ராதிகா, அருண் விஜய் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை சீமா பிஸ்வாஸ் துணை வேடத்தில் நடித்துள்ளார். அருண் விஜயை காதலிக்கும் ராதிகா அவருக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார். அந்த சமயத்தில் ராதிகா இருக்கும் இடத்திற்கு வரும் ஷாம்..நாயகி மீது காதல் கொள்கிறார். பின்னர் நாயகியின் காதலை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார் ஷாம்.முக்கோண காதல் கதையால் ரசிகர்களை கவர்ந்தது இந்த படம்.
Kanda Naal Mudhal
கண்ட நாள் முதல் :
கண்ட நாள் முதல் படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் நகைச்சுவைத் திரைப்படம். இந்த படத்தை வி. பிரியா எழுதி இயக்கி இருந்தார். டூயட் பிலிம்ஸ் பேனரில் பிரகாஷ் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசன்னா , லைலா , கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் முக்கோண காதல் வடிவில் உருவானது.
YAARADI NEE MOHINI
யாரடி நீ மோகினி :
தனுஷ், நயன்தாரா, சித்தார்த் மூவரும் முக்கிய வேடத்தில் வந்த யாரடி நீ மோகினி படம் கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெற்றி பெற்ற செல்வராகவனின் 'ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே' படத்தின் ரீமேக் ஆகும். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நண்பனின் முறைப்பெண் என தெரியாமல் நாயகியை காதலிக்கும் நாயகன்..மெல்ல மெல்ல நாயகன் பக்கம் சாயும் நாயகி என ஒரு வித்யாசமான முக்கோண காதலாக இந்த படம் வெற்றி பெற்றது.
hey sinamika
ஹே சினாமிகா :
சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியிருந்த ஹே சினாமிகா படம் இரு நாயகிகளுடன், ஒரு நாயகன் படும் பாட்டை எடுத்து சொன்னது. துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வானிலை விஞ்ஞானி மௌனாநாயகன் யாழனை காதலிக்கிறார், ஆனால் உளவியலாளர் டாக்டர் மலர்விழி நகரத்திற்கு வரும்போது அவர்களின் உறவு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படமும் நல்ல விமர்சங்களை தட்டி சென்றது.
KaathuvaakulaRenduKaadhal
காத்து வாக்குல ரெண்டு காதல் :
இந்த வரிசையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இடம் பிடித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இரு தோழிகளை ஒரே நேரத்தில் காதலில் விழா வைக்கும் நாயகன் உண்மை வெளியான பிறகு சந்திக்கும் சிக்கல்களே இந்த படத்தின் மைய கருத்து என டிரைலர் மூலம் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.