லியோ படம் முடித்த கையோடு... சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ் - ஆத்தாடி அதன் விலை இத்தனை கோடியா?
லியோ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய அவரது பயணம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து நூறு சதவீத வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதில் பிசியாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த பிசிக்கு மத்தியிலும் ஒரு புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி இருக்கிறார். புது கார் வாங்கியபோது லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த காரின் மதிப்பு 1.70 கோடியாம். புது கார் வாங்கிய லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நாளுக்கு நாள் யூத் ஆகிக்கொண்டே போகும் லெஜண்ட் சரவணன்... அவரின் ஒரிஜினல் வயசு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!
இதற்கு முன்னதாக அவர் லெக்சஸ் கார் வைத்திருந்தார். அந்த காரை நடிகர் கமல்ஹாசன் தான் பரிசாக வழங்கி இருந்தார். விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றதை அடுத்து தன் அன்பு பரிசாக லெக்சஸ் காரை லோகேஷுக்கு சர்ப்ரைஸாக வழங்கினார் கமல். அந்த லெக்சஸ் காரின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். தற்போது அதற்கு டபுள் மடங்கு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. பெட்ரோல் வேரியண்ட்டான இது ஜீரோவில் இருந்து 100 கி.மீ வேகத்தை 5.4 விநாடிகளில் எட்டிவிடுமாம். ஸ்மார்ட் போன் வசதியுடன் இந்த காரை அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.61 கி.மீ மயிலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2 மணிநேரத்தில் மலர்ந்த காதல்... சூப்பர்ஸ்டாரின் சூப்பரான லவ் ஸ்டோரி தெரியுமா?