என்னது ‘தி லெஜண்ட்’ படம் 45 கோடி லாபமா...! அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட அண்ணாச்சி... ஆடிப்போன ரசிகர்கள்
Legend saravanan : லெஜண்ட் சரவணன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் படி 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் படம் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான சரவணன் அருள், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா போன்ற முன்னணி கதாநாயகிகளோடு நடித்து வந்தார். இதையடுத்து சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க முடிவெடுத்த சரவணன் ‘தி லெஜண்ட்’ என்கிற திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கினர். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயன்றனர். ஆனால் அவர் முடியவே முடியாது என கறாராக சொல்லிவிட்டதால், பாலிவுட்டில் இருந்து நடிகை ஊர்வசி ரவ்துலாவை களமிறக்கினர். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் வழங்கப்பட்டது.
இப்படத்தை பிரம்மாண்டமாக எடுத்து முடித்து கடந்த மாத இறுதியில் ரிலீஸ் செய்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உலகமெங்கும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு போல் இப்படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்
இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், வெளியானது முதல் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. சரவணனுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ரிலீசான ஒரே வாரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், தன்னுடைய முதல் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் சரவணன். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதுதவிர இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.20 கோடிக்கும், ஓடிடி உரிமையை ரூ.25 கோடிக்கும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால் தி லெஜண்ட் திரைப்படம் ரூ.45 கோடி லாபம் ஈட்டி இருப்பதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !