- Home
- Cinema
- மாஸான தோற்றத்திற்கு மாறிய லெஜண்ட் சரவணன்... அல்லு அர்ஜுனுக்கே டஃப் கொடுக்கும் அண்ணாச்சியின் நியூ லுக் வைரல்
மாஸான தோற்றத்திற்கு மாறிய லெஜண்ட் சரவணன்... அல்லு அர்ஜுனுக்கே டஃப் கொடுக்கும் அண்ணாச்சியின் நியூ லுக் வைரல்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், முதலில் தன் கடையின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு பேமஸ் ஆனார்.
இதையடுத்து சினிமாவில் நடிகராக களமிறங்கிய லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்தார். விசில் படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இப்படத்தை இயக்கி இருந்தனர்.
தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி விஜயகுமார், ரோபோ சங்கர், விவேக், மயில்சாமி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
பான் இந்தியா படமாக எடுக்கப்பட்ட இப்படத்தை கடந்தாண்டு ஜூலை மாதம் உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ததோடு, அதிகாலை 4 மணி காட்சியெல்லாம் திரையிட்டு அதகளப்படுத்தி இருந்தார் அண்ணாச்சி.
சமீபத்தில் கூட இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது மட்டுமின்றி அதில் முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அதிக வியூஸ் பெற்று சாதனை படைத்தது.
தற்போது தனது அடுத்தபடத்திற்காக வெறித்தனமாக தயாராகி வருகிறார் அண்ணாச்சி. இதற்காக கோர்ட் சூட் அணிந்து தாடியுடன் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் அலவைகுண்டபுரம் படத்தில் இதே போன்று ஒரு கெட் அப்பில் வந்திருப்பார். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த போட்டோஷூட் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அண்ணாச்சி இந்த கெட் அப்பில் பார்க்கும் போது சத்யராஜ் மகன் சிபிராஜ் போன்று இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.