- Home
- Cinema
- ஸ்கூல் பாய் லுக்கிற்கு மாறிய அண்ணாச்சி... 50 வயதைக் கடந்தும் இவ்வளவு இளமையா என ஆச்சர்யப்படும் நெட்டிசன்கள்
ஸ்கூல் பாய் லுக்கிற்கு மாறிய அண்ணாச்சி... 50 வயதைக் கடந்தும் இவ்வளவு இளமையா என ஆச்சர்யப்படும் நெட்டிசன்கள்
Legend saravanan : ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் படிக்கும் பையனைப் போல் இருக்கும் லெஜண்ட் சரவணனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் ரிலீசான தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார்.
45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்க வசூல் மூலம் மட்டும் ரூ.45 கோடி வசூலித்ததாகவும், இதுதவிர ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ரூ.45 கோடிக்கு விற்கப்பட இருப்பதாகவும் கூறினார். மோசமான விமர்சனங்களை பெற்ற இப்படம் எப்படி ரூ.45 கோடி லாபம் பார்த்தது என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... ரஜினி ஆசைப்பட்டு கேட்டும்... பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்
தற்போது அவர் தனது இரண்டாவது படத்திற்காக தயாராகி வருகிறாராம். இப்படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து சரவணன் அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சரவணன் அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் பையனைப் போல் இருக்கும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. வயது 50-ஐ கடந்த போது எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பம்பர் ஹிட் அடித்த வெந்து தணிந்தது காடு... நான்கே நாளில் சிம்பு படம் குவித்த மொத்த வசூல் இத்தனை கோடியா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.