MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட்டே கெஞ்சி கேட்டும் செய்யாத விஷயத்தை... பாலிவுட் படத்துக்காக செய்யப்போகிறாரா நயன்தாரா?

கோலிவுட்டே கெஞ்சி கேட்டும் செய்யாத விஷயத்தை... பாலிவுட் படத்துக்காக செய்யப்போகிறாரா நயன்தாரா?

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள நயன்தாரா, அப்படத்துக்காக பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கொள்கையை தளர்த்த உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 17 2023, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு கடந்தாண்டு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியில் அவர் நடித்துள்ள முதல் திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்.

25

ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இப்படத்திற்கான புரமோஷன் பணிகளை இந்தியா முழுவதும் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டு உள்ளது.

35

ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இப்படமும் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார் அனி. ஜவான் படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜவான் படத்திற்காக நடிகை நயன்தாரா, தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கொள்கையை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... 400 கோடிலாம் இல்ல... ஜெயிலர் படத்தின் 7 நாள் வசூல் இவ்ளோதான் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

45

தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா, தான் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். அதையே அவர் ஒரு பாலிசியாவும் வைத்துள்ளார். இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. ஆனால் சமீப காலமாக தனது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான புரமோஷனில் மட்டும் தலைகாட்டி வருகிறார் நயன்.

55

இந்த நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள ஜவான் படத்துக்காக தன்னுடைய நோ புரமோஷன் பாலிசியை நயன்தாரா தளர்த்த உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஷாருக்கான் தனக்கு பிடித்த நடிகர் என்பதால் நயன்தாரா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், கோலிவுட் பிரபலங்கள் கோபமடைந்துள்ளனர். கோலிவுட் பிரபலங்கள் பலர் கெஞ்சி கேட்டும் புரமோஷனுக்கு வர மறுத்த நயன்தாரா, தற்போது பாலிவுட் போனதும் பாலிசியை மாற்றினால் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்ளப்போகிறாரோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... நாளுக்கு நாள் யூத் ஆகிக்கொண்டே போகும் லெஜண்ட் சரவணன்... அவரின் ஒரிஜினல் வயசு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
நயன்தாரா
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved