லேடி சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா?... சம்பளத்தை டபுளாக்கி தயாரிப்பாளர்களை டரியலாக்கிய நயன்தாரா... ஏன் தெரியுமா?
அதுமட்டுமின்றி தற்போது 6 படத்திற்கு டபுள் சம்பளத்துடன் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அதனால் தான் அவருடைய ரசிகர்கள் கூட அவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். கவர்ச்சி உடையில் கலக்க வேண்டும் என்றாலும் சரி, கண் கலங்க வைக்கும் படி கதறி அழச் சொன்னாலும் சரி நயனின் நடிப்பை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும், அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் சோலோ ஹீரோயினாக பர்பாமென்ஷில் பின்னுவதிலும் சரி நயன்தாராவின் லெவலே தனி தான்.
தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நயன் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி தற்போது 6 படத்திற்கு டபுள் சம்பளத்துடன் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ரூ. 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியால் நயன்தாராவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், 5 கோடி செலவு செய்த படத்திற்கு ரூ.20 கோடி லாபமா? என கணக்கு போட்ட பிரபல தயாரிப்பாளர்கள் தற்போது நயனை வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை எடுக்க அணுகியுள்ளனர்.
இதற்கு முன்னதாக ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா டக்கென தன்னுடைய சம்பளத்தை டபுளாக உயர்த்திவிட்டதாக கூறி ஷாக் கொடுத்திருக்கிறார். அதாவது இப்போது லேடி சூப்பர் ஸ்டாரின் சம்பளம் ரூ.10 கோடியாம். அப்படி பார்த்தாலும் நயனை வைத்து படம் எடுத்தால் லாபமே மிஞ்சும் என்பதால் 3 பிரபல தயாரிப்பாளர்கள் தங்களுடைய 2 படங்கள் வீதம் மொத்தம் 6 படத்திற்கு நயனை புக் செய்துள்ளார்களாம். அதற்காக பாதி அமெண்ட்டை இப்போதே அம்மணி அட்வான்ஸாக வாங்கி விட்டதாகவும் தகவல்.