18 வயசு பட்டாம்பூச்சி... ஹீரோயினாக முதல் பிறந்தநாள் - கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த அனிகா.. வைரலாகும் போட்டோஸ்
அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனிகா நேற்று தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தாந் அனிகா. இப்படத்தின் வெற்றிக்கு, இவருக்கும் அஜித்துக்கும் இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ரி ஒர்க் அவுட் ஆனதும் முக்கிய காரணம்.
இதையடுத்து ஜெயம் ரவியின் மிருதன், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்த அனிகாவுக்கு, அஜித்தின் விஸ்வாசம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார் அனிகா. இதனால் இப்படத்திற்கு பின் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
இதையும் படியுங்கள்... பிரபல சீரியலை விரும்பி பார்க்கும் ரஜினிகாந்த்... சூப்பர்ஸ்டாரே சூப்பர்னு சொன்ன அந்த சீரியல் எது தெரியுமா?
இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக அறிமுகாகி உள்ளார். அதன்படி இவர் புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகை அனிகா நேற்று தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அவர் ஹீரோயின் ஆன பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாள் விழாவில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கருப்பு நிற உடை அணிந்து வந்த அனிகா, பிரம்மண்ட கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கேக்கில் 18 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுக்கு சோசியல் மீடியவில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... மாஸ்டர் பிளானுடன் திடீர் என ஹைதராபாத் விசிட் அடித்த தனுஷ்..! ஏன் தெரியுமா? வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ..