- Home
- Cinema
- தன்னிடம் இல்லை என்றாலும் மக்களிடமிருந்து ரூ.8 கோடி நிதி திரட்டி குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாலா!
தன்னிடம் இல்லை என்றாலும் மக்களிடமிருந்து ரூ.8 கோடி நிதி திரட்டி குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாலா!
KPY Bala Helps to Collects Rs 8 Crore and Saves Baby Life : நடிகரும், சமூக சேவகருமான பாலா, தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு செய்த உதவிகளுக்காக, தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யார் என்ற ரியாலிட்டி ஷோவின் மூலமாக பிரபலமான பாலா, அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த தனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வந்தார். பொதுவாக தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்பார்கள், ஆனால், பாலா அதற்கு எதிராக தனக்கு கிடைப்பதையெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
ஆம்புலன்ஸ், ஆட்டோ, தையல் மிஷின் என்று உணவு, உடை, மருத்துவ செலவுகள், கல்வி உதவிகள் என்ரு எத்தனையோ பேருக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சிறியதாக ஆரம்பித்த பணி இன்று எத்தனையோ பேர காப்பாற்றி இருக்கிறார். மேலும், ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்.
ரூ.8 கோடி நிதி திரட்டி கொடுத்த பாலா
சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களை வழங்கி வந்தார். பாலாவுடன் இணைந்து இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸூம் உதவி செய்து வந்தார். ஏற்கனவே அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் சூழலில், பாலாவை சேவையை பாராட்டி அவருடன் இணைந்து தானும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று அவருடன் இணைந்து சமூக சேவை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான், மரபணு குறைபாடு உள்ள குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ.8 கோடி நிதி வேண்டும் என்று பாலா கேட்டிருந்த நிலையில் குழந்தையின் மருத்துவ செலவிற்கான ரூ.8 கோடி பணமும் பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாலா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாலா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பாலா கூறியிருப்பதாவது: என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. மக்களாகிய நீங்கள் தான் அதற்கான காரணம். சாஸ்திகா என்ற குழந்தை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மருத்துவ செலவிற்கு ரூ.8 கோடி தேவைப்பட்டது என்று கூறி நான் வீடியோ பதிவிட்டிருந்தேன்.
அந்த வீடியோவிற்கு கிடைத்த பலனாக இப்போது நீங்கள் அனைவரும் செய்த உதவியின் மூலமாக ரூ.8 கோடி கிடைத்துவிட்டது. மேலும், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் நலமாக இருக்கிறார். எனது வீடியோவின் மூலமாக இத்தனை கோடி பணம் அனுப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பாலாவுடன் குழந்தையின் தந்தையும் வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு அந்த வீடியோவின் இறுதியில் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள் என்று பாலா குறிப்பிட்டுள்ளார்.