- Home
- Cinema
- மகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய ஐசரி கணேஷ்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள்
மகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய ஐசரி கணேஷ்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தன்னுடைய ஒரே மகளான ப்ரீத்தாவின் திருமணத்தை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Ishari Ganesh Daughter wedding
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் ஐசரி கணேஷ் (Ishari Ganesh). வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தமிழில் கோமாளி, மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளார். இவர் தயாரிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. அப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார் ஐசரி கணேஷ். இதுதவிர ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி, விஜே சித்துவின் டயங்கரம், தனுஷ் - மாரி செல்வராஜ் படம், தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகும் படம் என அரை டஜன் படங்களை தற்போது தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவர் லுஷ்வின் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதன் புகைப்படத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் மணிரத்னம்
ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமணத்தில் இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய மனைவி சுஹாசினி உடன் வந்து கலந்துகொண்டார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் வந்து ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் வெற்றிமாறன்
கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த கேண்டிட் புகைப்படம்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் துர்கா ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலினி மனைவி துர்கா ஸ்டாலின் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பிரபு குடும்பத்தார்
நடிகர் பிரபு தன்னுடைய மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் ஆதிக் உடன் வந்து ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த்
ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணத்தில் கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மணமக்களுக்கு பரிசு வழங்கினார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் சத்யராஜ்
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கமல்ஹாசன்
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், மணமக்களுக்கு தன் கையால் கல்யாண பரிசு வழங்கினார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கெளதம் மேனன்
இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் விக்னேஷ் ராஜா ஆகியோர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.