MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போதையில் அடாவடி... ஐடி ஊழியரை கிட்நாப் பண்ணி தாக்கிய சம்பவம்; தலைமறைவான லட்சுமி மேனன் - வலைவீசி தேடும் போலீஸ்

போதையில் அடாவடி... ஐடி ஊழியரை கிட்நாப் பண்ணி தாக்கிய சம்பவம்; தலைமறைவான லட்சுமி மேனன் - வலைவீசி தேடும் போலீஸ்

கொச்சியில் ஒரு ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது புகார் எழுந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Police Search Actress Lakshmi Menon
Image Credit : Asianet News

Police Search Actress Lakshmi Menon

கொச்சியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், நடிகை லட்சுமி மேனனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் தொடங்கிய இந்த மோதலில், ஐடி ஊழியரை காரில் கடத்தி, தாக்கி, லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய நடிகை லட்சுமி மேனனை வலைவீசி தேடி வருகிறார்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கிட்நாப் பண்ணி தாக்குதல்
Image Credit : Instagram

கிட்நாப் பண்ணி தாக்குதல்

ஆலுவா நகரைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவர் தான் புகார் அளித்திருக்கிறார். அதன்படி கொச்சியில் உள்ள ஒரு பாரில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாம். லட்சுமி மேனன், மிதுன், அனீஷ் மற்றும் மற்றொரு பெண் நண்பர் ஒரு குழுவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த மோதல் வீதி வரை சென்றிருக்கிறது, அலியார் மற்றும் அவரது நண்பர்களும் பாரில் இருந்து வெளியேற முயன்றபோது, ​​லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் அலியாரின் வாகனத்தைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இரவு 11:45 மணியளவில், வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே, அலியாரின் கார் நிறுத்தப்பட்டு, அவர் வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டிருக்கிறார்.

34
இருவர் கைது
Image Credit : our own

இருவர் கைது

எஃப்ஐஆர் படி, அலியாரை லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் தங்கள் வாகனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் முகம் மற்றும் உடலில் தாக்கியதோடு, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் விட்டுவிட்டு லட்சுமி மேனன் தன்னுடைய நண்பர்களுடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதுகுறித்து அலியார் அளித்த வாக்குமூலத்தின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக ஆலுவா மற்றும் பரவூரைச் சேர்ந்த மிதுன் மற்றும் அனீஷ் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

44
லட்சுமி மேனன் தலைமறைவு
Image Credit : our own

லட்சுமி மேனன் தலைமறைவு

கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர், லட்சுமி மேனனிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை லட்சுமி மேனன் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப்புலி', 'ஜிகர்தண்டா', 'மிருதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது ஆள் அட்ரஸே தெரியாமல் போய்விட்டார். அவரது நடிப்பில் கடைசியாக சப்தம் என்கிற திரைப்படம் வெளியானது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Prabhu Deva: பிரபுதேவா - லட்சுமி மேனன் நடித்துள்ள 'எங் மங் சங்' எப்போது ரிலீஸ்?
Recommended image2
"நான் தான் அவருக்கு புரபோஸ் பண்ணேன்.. ஆனா இப்போ..” முதல் காதல் குறித்து நடிகை லட்சுமி மேனன் ஓபன் டாக்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved