- Home
- Cinema
- Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Khushbu Daughter Anandita : குஷ்பூ - சுந்தர் சி ஜோடியின் இளைய மகளான அனந்திதா, தளபதி விஜய்யை முதன்முறையாக சந்தித்தபோது மயங்கி விழுந்ததாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Anandita Sundar Fainted After Meeting Vijay
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி மற்றும் குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா தற்போது திரைப்பட உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அவர், குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் சார்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜூன் 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனந்திதா, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யை சந்தித்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மயங்கி விழுந்த அனந்திதா
அவர் கூறுகையில், “விஜய்யை முதல் முறையாக நேரில் சந்தித்த தருணம் இன்னும் என் நினைவில் தெளிவாக இருக்கிறது. என்னை பார்த்தவுடன் ‘வாம்மா’ என்று அன்பாக அழைத்து தோளில் கை வைத்தார். அந்த நொடியே நான் காலி. அப்படியே மயங்கிவிட்டேன். உடனே என்னை தாங்கிப் பிடித்து ஓகேவா என்று கேட்டார். பின்னர் காரில் அமர்ந்தவுடன் அவரை சந்தித்த மகிழ்ச்சியில் கண்கலங்கிப் போனேன்” என்றார்.
மேலும், “சில நிமிடங்கள் கழித்து அழுகை நின்றாலும் என்னுடைய கார் அங்கிருந்து செல்லவே இல்லை. வெளியே பார்த்தபோது விஜய் சார் என்னை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். அந்த சந்திப்பு 2021-ஆம் ஆண்டு நடந்தது” என்று சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.
இரண்டாம் சந்திப்பில் அழுதுவிட்டேன்
பின்னர் ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது மீண்டும் விஜய்யை சந்திக்க நேர்ந்ததாக கூறிய அனந்திதா, “அம்மா குஷ்பூ அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் செட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது ‘மீண்டும் விஜய்யைப் பார்த்து அழுது விடாதே’ என்று அம்மா முன்கூட்டியே எச்சரித்தார். நானும் தைரியமாக இருப்பேன் என்று சொன்னேன். ஆனால் அவரை பார்த்த அடுத்த நிமிடமே உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் அழுதுவிட்டேன்” என்றார்.
லேட்டஸ்ட் சந்திப்பு
சமீபத்தில் குடும்ப நிகழ்வொன்றுக்காக விஜய்யை சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்த அவர், “இந்த முறை மட்டும் அழக்கூடாது என்று வீட்டிலேயே என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். அதன்படி நான் அழவில்லை. ஆனால் 15 நிமிடங்கள் முழுவதும் அவரையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அக்கா கூட ‘இப்படி பார்த்துக் கொண்டே இருந்தால் விஜய் பயந்து விடுவார்’ என்று கிண்டல் செய்தார். விஜய் மிகவும் எளிமையானவர், அன்பானவர். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மறக்க முடியாத நினைவாக உள்ளது” என்று தெரிவித்தார். அனந்திதாவின் இந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

