KGF 2 வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய ஸ்ரீநிதி ஷெட்டி- இதெல்லாம் ரொம்ப ஓவர் என தெறித்தோடிய தயாரிப்பாளர்
Srinidhi shetty : கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் தங்களது சம்பளத்தை உயர்த்திய நிலையில், தற்போது நடிகை ஸ்ரீநிதியும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்ததன் காரணமாக அதன் இரண்டாம் பாகத்திற்கும் மவுசு அதிகரித்திருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி உலகமெங்கும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் தங்களது சம்பளத்தை உயர்த்தினர்.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதற்காக அவரை தயாரிப்பாளர் ஒருவர் அணுகினாராம். அப்படத்தில் நடிக்க தனக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கேட்டதால் அவர் ஆடிப்போனாராம்.
அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என கூறிவிட்டு அந்த தயாரிப்பாளர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் தான், அப்படத்தில் குறைந்த அளவு காட்சிகளில் மட்டுமே நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இவ்வளவு தொகை கேட்பதெல்லாம் ரொம்ப ஓவர் என அந்த தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
இதையும் படியுங்கள்... DON : டான் சக்சஸை சூப்பர்ஸ்டாருடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்... ரஜினி உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சி