குடிபோதையில் தான் கதை எழுதுவேன்.... ஓப்பனாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘கே.ஜி.எஃப்’ இயக்குனர்
Prashanth Neel : அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் பிரசாந்த் நீல்.
கன்னடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான உக்ரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய கே.ஜி.எஃப் திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடியது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அதே கூட்டணியில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகமும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உலகளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது.
அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் பிரசாந்த் நீல். இவர் கே.ஜி.எஃப் 2 படத்தை புரமோட் செய்யும் விதமாக பல்வேறு பேட்டிகளைக் கொடுத்துள்ளார். அதில் ஒரு பேட்டியில் தான் கதை எழுதுவதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தான் மது அருந்திய பின்னர் தான் கதை எழுதுவதாக தெரிவித்துள்ள பிரசாந்த் நீல், மறுநாள் போதை தெளிந்து நிதானம் ஆன பின்னர், அந்த கதையை படித்து பார்த்து அது பிடித்துப்போனால் அதற்கு திரைக்கதை எழுதுவேன் என்று கூறி உள்ளார். அவரின் இந்த பதில் ஆச்சர்யமாக இருந்தாலும், இதைப்பார்த்து குடிபோதையில் கதை எழுதினால் தான் நன்றாக வரும் என நினைத்து வருங்கால இயக்குனர்கள் போதைக்கு அடிமை ஆகி விடுவார்களோ என்கிற அச்சமும் எழுகிறது.
இதையும் படியுங்கள்... உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி... குட்டை கவுனில் கும்முனு போஸ் கொடுத்த பேச்சிலர் நடிகையின் கிக்கான போட்டோஸ்